இனத்தான் மீட்பர் THE KINSMAN REDEEMER அக்டோபர் 2, 1960 பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. உங்களுக்கு நன்றி, சகோதரன் நெவில். கர்த்தர் உங்களை  ஆசீர்வதிப்பாராக. இக்காலையில் கர்த்தருடைய வீட்டில் இருப்பது மிகவும் நன்றாக இருக்கின்றது. ஒரு சமயம், “கர்த் தருடைய ஆலயத்திற்கு நாம் போவோம்'' வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்'' என்று கூறப்பட்டது என்பதை நான் விசுவாசிக்கிறேன். சார்லி, கம்பத்தின் பின்னாலிருந்து இங்கு வந்து நாற் காலியில் அமருங்கள்; இங்கு வாருங்கள். சகோதரியே, நாங்கள் உள்ளே நுழைந்து கொள்ள பின்னால் எங்காவது ஒரு நாற்காலி உள்ளதா? சீமாட்டியே, இங்கு ஒரு இடம் இருக்கின்றது. இங்கு வாருங்கள். சார்லி, இங்கு வந்து பாங்க்ஸின் பக்கத்தில் அமருங்கள், நீங்கள் அங்கு நிற்க வேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் அந்த பையன் கென்டக்கியிலிருந்து வரும்போது, இங்கே வந்து, நின்று கொண்டிருக்கிறான். ஆகவே அவனை இங்கே வரும்படிச் செய்கிறோம்.  2. அந்த வரிசையின் ஓரத்தில் யாராவது ஒருவருக்கு இடம் உள்ளது, (சகோதரன் நெவில், “அங்கே மற்றுமொரு ஸ்திரீயும் இருக்கிறார்கள்'' என்கிறார் - ஆசி). பின்னால் ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருக்கிறாள். இங்கு வாருங்கள், சகோதரியே, இங்கு அருகில் ஒரு இடம் உள்ளது. இங்கு முன்னால் வாருங்கள். யாரோ ஒருவர் சக்கர நாற்காலியில் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இல்லையா? (ஒரு சகோதரி, “சகோதரன் பிரான் ஹாம்?'' என்கிறார்கள் - ஆசி) ஆம். ('அங்கே ஒரு இருக்கை இருக்கின்றது') இங்கு வேறொரு இருக்கை உள்ளது. இங்கு கூட ஒரு இருக்கை உள்ளது. அங்கே பின்னால் யாராவது ஒருவருக்கு இடம் தேவைப்பட்டால், சரியாக இங்கே ஒரு இருக்கை இருக்கின்றது (ஒரு சகோதரன் “சகோதரன் பிரான்ஹாம் இங்கேயும் ஒன்று இருக்கின்றது'' என்று கூறுகிறார்) இங்கேயும் ஒன்று இருக்கின்றது. தாராளமாக அமருங்கள். (“அங்கே மற்றுமொரு இடமும் உள்ளது') ஆம், நீங்கள் இங்கே அமர்ந்து கொள்ளலாம். இப்பொழுது, வாருங்கள், உங்கள் இருக்கையில் அமருங்கள். நலமாக...  3. நாங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டுவர முயற் சிக்கையில் நீங்கள் சௌகரியமாக உட்கார வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஓ, இங்கே இருப்பது நிச்சயமாக மகிழ்ச் சிக்குரிய ஒன்றாகும்.  4. நான் சார்லியை மேடையின் மேல் காணவில்லை. அவர் பின்னால் இருக்கிறாரா? நல்லது, அவரை இங்கு அனுப்புங்கள். என்னே! கடந்த சில நாட்களாக நான் சார்லியுடன் கூட இருந் தேன். அவருடைய வீட்டுக்குச் சென்று உணவு உண்ணாமல் செல்ல என்னால் முடியவில்லை. எனவே இன்று காலை அவரை நான் மேடைக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும், அவர் இங்கு வரும்போதெல்லாம் சுவற்றின் அருகே நின்று கொண்டு, யாராகிலும் ஒருவருக்கு இருக்கையைக் கொடுத்துவிடுகிறார். இன்று காலை நான் பார்த்தபோது அவர் நின்று கொண்டிருக்கக் கண்டேன். நான், 'இப்பொழுது நான் நான் அவரை இங்கே வரவழைப்பேன்'' என்று எண்ணினேன். நல்லது, அது - அது அருமையானது. அது நல்லது. இன்று காலை சகோ. ரசல்காக்ஸ் நமக்கு செய்தி அளிப்பார். (சகோ.பிரான்ஹாம் மற்றும் சபையார் சிரிக்கின்றனர் - ஆசி) நெல்லி எங்கே? நான்... அது அவருக்கு ஒரு நல்ல அனுபவமாயிருக்கும். ஆம், அதுதான்.  5. நல்லது, நமது நண்பர்களில் அநேகர் வெளியிலிருந்து இங்கு வந்துள்ளதைக் குறித்து நான் நிச்சயம் மகிழ்வுறுகிறேன். சென்ற ஞாயிறு நான் இவ்விடம் விட்டுச் சென்ற பின்பு, வாரம் முழுவதும் சங்கடப்பட்டேன். தென் பாகத்திலிருந்து வந்த என் நல் நண்பர் ஒருவர் இங்கு உட்கார்ந்திருந்தார் - சகோ. வெஸ்ட். நான் கூட்டத்தின் மத்தியில் சென்றபோது நான், “இன்னார் - இன்னார் மற்றும் இன்னார் - இன்னாரைக் காண்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்'' என்றேன். ஆனால் எப்படியோ சகோ.வெஸ்ட் வெளியே புறப்பட்டுச் செல்லும் வரைக்கும் அவரை கவனிக் கவேயில்லை. அவரை வேண்டு மென்று நான் அசட்டை செய்து விட்டேன் என்று சகோ.வெஸ்ட் நினைப்பாரா என்று எண்ணி வாரம் முழுவதும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்- அவர் ஒரு கிறிஸ்தவர். அவர் அப்படி நினைக்க மாட்டார். நான் அவருடைய உண்மையான நண்பன் என்று அவர் அறிவார். எனவே அப்படி நான் செய்யமாட்டேன் என்று அவருக்குத் தெரியும்.  6. இன்று காலை நான் சாலையில் வந்துக் கொண்டிருக்கும் போது, வெவ்வேறு இடங்களிலிருந்து யாரையெல்லாம் காண் போம் என்று மனதில் எண்ணிக் கொண்டே வந்தேன்... இதோ சகோ.வெஸ்ட் மறுபடியுமாக இன்று காலை இங்கு வந்துள்ளார். ஓஹையோவிலிருந்து சகோதரன் மற்றும் சகோதரி கிட் இங்கு வந்திருக்கிறார்கள். என் நண்பரில் சிலர்.. சகோ, ஈவான்ஸ் இங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவரைக் காண நேற்று பிற்பகல் நான் விடுதிக்குச் சென்றிருந்த போது, அவர் சகோ.ஃபிரட்டுடனும் மற்றவர்களுடனும் வெளியே சென்றிருந் தார். அவர்கள் ஜார்ஜியாவிலுள்ள மாக்கானிலிருந்து நான் பேசும் ஒவ்வொரு ஞாயிறன்றும் தொலை தூரம் இங்கு வருகின்றனர். அது தொலைவில் உள்ளது. 800க்கும் அதிகமான மைல்கள் என்று நினைக்கிறேன். நான் பேசும் ஒவ்வொரு நாளும் அவர் குடும்பமாக இங்கு காரோட்டி வருகிறார். அது விசுவாசமுள்ள செயல். 7. ஓ, அப்படியானால் உன் பட்சத்தில் உன்னோடு நிற்க விரும்பும் நண்பர்கள் உனக்கு இருப்பார்களென்றால்! என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது அம்மக்கள் ஜார்ஜியா மற்றும் ஓஹையோ இன்னும் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, இச்சிறு கூடாரத்திற்கு நான் பேசுவதைக் கேட்க இங்கே வரவில்லை. ஏனென்றால் அவர்கள் அந்தச் செய்தியை விசுவாசிப்பதால்தான் இங்கு வருகின்றனர். அவர்கள் அந்த செய்தியை விசுவாசிக்கின்றனர். அப்படியானால் அந்தச் செய்தி யைக் குறித்து நான் எவ்வளவு நேர்மையாகவும் உத்தமமாகவும் இருக்கவேண்டும். ஏனெனில் நான் தவறு செய்வது மாத்திர மல்ல, நான் மற்றவரையும் தவறுக்குள் வழி நடத்துகிறவனாயிருப் பேன். பாருங்கள்? அந்த தவறுக்காக தேவன் என்னை உத்திரவாத மாக்குவார். ஏனெனில் அந்த தவறை போதித்தவன் நானே. பாருங்கள்! 8. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்விதமாக நீங்கள் சிந்திக்கும்போது, அது உங்களை உண்மையில் ஆழ்ந்து சிந் திக்கும்படி செய்கிறது. எனவே உங்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். நீங்கள் ஆபத்தான சாலைகளின் வழியாக, விபத் துகள் நடக்கும் அந்த நெடுஞ்சாலைகளின் வழியாக, நூற்றுக் கணக்கான மைல்கள் காரோட்டி வருகின்றீர்கள் என்றறிவது மிகச் சிறந்தது... நீங்கள் தேவனில் கொண்டுள்ள விசுவாசம் உங்களை எப்படியோ உந்தி இங்கு கொண்டு வந்து, உங்களை மறுபடியும் இங்கிருந்து கொண்டு செல்கிறது. இப்படிப்பட்ட நண்பர்களைக் கொண்டிருப்பதைக் குறித்து நாங்கள் மகிழ்வுறு கிறோம். தேவனுடைய ஐசுவரியமான ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் தங்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.  9. இப்பொழுது சென்ற ஞாயிறன்று நான், நான் “நல்லது, நாங்கள் பேசி விட்டு, ஜெப வரிசையை அழைக்கப் போகிறோம்'' என்றேன். நான் அதிகமான ஜனங்களுக்கு ஜெபிக்க ஒரு முறையைக் கண்டு பிடிக்க வேண்டு மென்று பிரயாசப்பட்டு வருகிறேன். சென்ற ஞாயிறு செய்தது போல நான் அநேகருக்கு ஜெபிக்க நேரிட்டால்... யாராகிலும் ஒருவர் எனக்கு ஜெபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். சென்ற ஞாயிறு நான் சுமார் 2 மணி அளவில்தான் இங்கிருந்து சென்றேன். நான் ஜெப அட்டைகள் கொடுக்கவில்லை.  10. ஜெப அட்டைகள் கொடுப்பதென்பது மிகவும் கடினமான பணி. அது உங்களுக்குத் தெரியுமா இல்லையாவென்று எனக்கு தெரியாது... ஜனங்கள் உங்களை வெறுக்கின்றனர். நாங்கள் கென்டக்கிக்கு சென்றிருந்தபோது, பில்லி வராவிட்டால், தான் ஜெப அட்டை விநியோகிப்பதாகக் கூறி சகோ.பாங்க்ஸ் உட்ஸ் முன் வந்தார். பில்லி என் சொந்த மகன் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள்... “எனக்கு ஜெப அட்டை கொடுப்பதாக கூறிவிட்டு அந்த கருங்காலி கொடுக்காமல் போய்விட்டான்'' என்றெல்லாம் என் மகனைக் குறித்து சில கடிதங்கள் வருகின்றன. எனவே அவர்கள்.... அவனால் எல்லோருக்கும் ஜெப அட்டைகளைக் கொடுக்க முடியாது. நாங்கள் அநேகரை ஜெப வரிசையில் கொண்டுவர முடியாது. பாருங்கள்? அவன் என்னை பாதுகாக்க வேண்டும். 11. ஆகவே - ஆகவே நாங்கள் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது, என் மருமகள் என்னிடம் “பில், ஜெப அட்டைகளை விநியோகிக்க நீங்கள் மறுபடியும் பில்லியை அமர்த்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டீர்கள்'' என்றாள். 12. எனவே... நான் எங்கு தவறு செய்தேன் என்றால், சிந்தனை களைப் பகுத்தறியத் தொடங்கின போது, ஒருவர் திரும்பி வந்து, “நான் மறந்து போனேன். தாயார் ஜெபம் ஏறெடுக்கப்பட விரும் புகிறார்கள்'' என்கிறார். அவர்கள் எதற்காக திரும்பி வருகின்றனர். தெரியுமா? அந்த பகுத்தறிதலுக்காக, பாருங்கள். ஆதலால், ஆனால் அவர்களை நான் குறை கூறவில்லை. நானும் அதே காரியத்தைச் செய்வேன். பாருங்கள்? நான் அதையே... நாமெல்லாரும் மானி டர்கள். நாம் எல்லோரும் வாழ - ஜீவிக்க விரும்புகிறோம். நாம் எதைச் செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள விரும்பு கிறோம். ஆதலால் தான் நாம்... ஆனால் நீங்கள் இந்த காரியங் களைக் கொண்டு, நீங்கள், ஒரு வரத்தினால், சிறிதளவு மாத்திரமே சென்று கொண்டிருக்க முடியும், அது இரண்டு முறைகள் அது நடக்கையில், பிறகு நீங்கள் களைப்படைந்து விடுகிறீர்கள்.  13. இன்று காலை சகோ. பாங்க்ஸ் ஜெப அட்டைகளை விநியோகிக்க வேண்டுமென்றிருந்தார். ஆனால் பில்லி நேற்றிரவு வந்துவிட்டான். எனவே சகோ.உட்ஸ் போன்ற நற்பெயர் பெற்ற ஒருவர் ஜெப அட்டைகளை விநியோகம் செய்து, ஜனங்கள் அவரை பழித்தால் அது மோசமாயிருக்கும் என்று எண்ணினேன். பில்லி அதைப் பொருட்படுத்துவதில்லை என்று நான் யூகிக்கிறேன். அவனுக்கு நீண்ட காலமாக வசைச் சொற்களைக் கேட்டு பழகி விட்டதால், அதை அவன் சும்மா விட்டுவிடுகிறான். சரி.  14. இப்பொழுது - இப்பொழுது இந்த வருகின்ற வாரத்தில், வருகின்ற வெள்ளிக்கிழமை இரவில், நான் டல்லாஸில் சுகமளிக் கும் சத்தம் கன்வென்ஷனில் கலந்து கொள்வேன். யாராகிலும் சுற்று வட்டாரத்தில் இருக்க நேரிட்டால், அந்த கன்வென்ஷனில் ஒரு இரவு பேசுவேன். கர்த்தருக்குச் சித்தமானால் ஐக்கியத்தை அணுகுதல் என்னும் பொருளின் பேரில் அங்கு பேச விரும்புகிறேன். 15. அதன் பிறகு ஒருக்கால், வருகின்ற ஞாயிறன்று, அது அடுத்து வரப்போகிற ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்குச் சித்த மானால்... எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் கர்த்தருக்கு சித்தமானால், நான் திரும்பி வந்து இன்றைக்கு பேச எத்தனித் திருந்த “சுழற்காற்றில் காற்று'' என்னும் பொருளின் பேரில் பேசுவேன். இன்றைக்கு நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக் கப் போகிறேன். அது சபையின் பாவங்களுக்காக அதை கடினமாகக் கடிந்து கொள்ளும் ஒரு செய்தியாகும்.... ஜெப வரிசையை அழைக்கும்போது பேசுவதற்கு அது உகந்த பொரு ளல்ல. ஜெபத்திற்காகவும் தேவனுக்கென்றும் நீங்கள் ஜனங் களுடைய விசுவாசத்தை வளர்க்க வேண்டியவர்களாயிருக்கிறீர் கள். எனவே இன்று காலை தேவனுக்கென்று ஜனங்களின் விசுவாசத்தை வளர்ப்பதற்கென்று நான் வேறொரு பொருளின் மேல் பேசுவேன் என்று அறிவிக்கும்படி சகோ.நெவிலிடம் கூறினேன் - அதாவது வேறுவிதமாகக் கூறினால், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாததன் நிமித்தம் ஜனங்களைக் கடிந்து கொள்வது. இந்த முறையில் அது ஜனங்கள் தேவனிடம் விசுவாசம் கொள்ளச் செய்ய, ஆயத்தம் செய்தல் ஆகும். பாருங்கள்? விசுவாசத்தை அது வளர்க்கும். நீங்கள் பாருங்கள்? 16. இன்று காலை ஜெப அறையில் அல்லது ஒலிப்பதிவு அறையில் என் வயோதிப நண்பர் சகோ.கிட் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது... அவருக்கு எண்பது வயது. அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அன்றொரு நாள் அவரிடம் நான் விரைந் தோடியது உங்களில் பலருக்கு ஞாபகமிருக்கும். அவர் ஏறக் குறைய... அது சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு. அவர் பயங்கரமான நோயுற்று மரணத்தருவாயிலிருந்தார். அவர் ஒரு வாரம் மாத்திரமே உயிரோடிருப்பார் என்று மருத்துவர்கள் அவகாசம் கொடுத்திருந்தனர். ஒரு வாரம் அல்ல, அவர்கள்... அவரை இங்கு கொண்டுவரும் காலை வரை உயிரோடிருக்க மாட்டார் என்று, அதாவது மூன்று நாட்கள். ஆனால் இப்பொழுது... அவருடைய இரத்த அழுத்தம் 105க்கு இறங்கியிருந்தது. இப்பொழுது அது 132க்கு வந்து விட்டதாக அவர் சில நிமிடங்களுக்கு முன்பு என்னிடம் கூறினார். அவர் ஒரு இளைஞனைப் போல் உணர்வதாக என்னிடம் கூறினார். 17. சகோ.கிட், சற்று எழுந்து நில்லுங்கள். இந்த வயோதிப பிரசங்கி யாரென்று ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும். அதோ அவர். நாம் 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லுவோம். (சபையார், “கர்த்தருக்கு நன்றி'' என்று கூறுகின்றனர் - ஆசி) புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தவர், இப்பொழுது அவர் அந்த நிலையில் இல்லை. அங்கே ஒரு அருமையான துணைவியையும் அவர் கொண்டிருக்கிறார். அவர்களும் கூட எழுந்து நிற்க நான் விரும்புகிறேன். நான் ... சகோதரி கிட், எழுந்து நிற்பீர்களா? இப்பொழுது அவர்கள்... அவர்களால் எவ்வளவு வேகமாக எழுந்து நிற்க முடிகிறது பார்த்தீர்களா? என்னைக் காட்டிலும் நன்றாகவே. தேவன் சகோதரன் சகோதரி கிட்டை ஆசீர்வதிப் பாராக. தேவனுடைய அபரிமிதமான ஆசீர்வாதங்கள் அவர்கள் மீது... சகோதரியே, நன்றி.  18. அவர்கள் கென்டக்கி மலைகளில் அரும்பாடுபட்டனர்..... நிலக்கரி வயல்களுக்குச் செல்லும் வழிகளில் மேலும் கீழும் ஓடி, உதைப்பட்டு, கேலி செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கிடைத் ததைக்கொண்டு ஜீவனம் செய்து... எங்காவது வழியில் காணும் தானியத்தைப் பொறுக்கி அரைத்து, இப்படியாக தேவனுடைய ராஜ்யத்துக்கென்று வாழ்ந்து வந்தனர். எண்பது வயதாகியும் இன்னுமாக சுவிசேஷத்தை பிரசங்கித்து வருகின்றனர். இப்பொழுது வெளியே செல்ல அவர்களுக்கு அதிக வயதாகி விட்டது. எனவே நான் உறுமால்களின் மேல் ஜெபித்து அவைகளை அவர் களுக்கு அனுப்பித் தருகிறேன். அவர்கள் அவைகளை மருத்துவ மனைகள் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். ஜனங்கள் இவர்களிடம் வந்து அதை பெற்றுக்கொள்கின்றனர். அது உண்மையான இருதய வாஞ்சை, இல்லையா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) உங்களால் சென்று ஜனங்களை சந்திக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஜெப உறுமால்களை அவர் களுக்கு அனுப்பித் தரலாம் - ஜனங்களுக்கு... விசுவாசம் உள்ள வர்களுக்கு. அது மிகவும் நல்லது.  19. சகோ.ராஜர்ஸும் கூட இங்கு எங்கோ இன்று இருக்கிறார். இவர் சகோ. க்ரீச்சின் மாமனார்... எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவருடைய வீட்டுக்கு நான் என் சொந்த வீடு போல்... கென்டக்கியில் சார்லி, நெல்லி வீட்டுக்கு நான் போவது போல். அங்கு நான் சென்று அவருடன் எப்பொழுதும் வேட்டையாடுவது வழக்கம். அண்மையில், அதாவது 13 மாதங்களுக்கு முன்பு, மருத்துவர் இவருடைய வயிற்றை அறுத்து புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கண்டு ‘ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறிவிட்டார். 20. ''என் விலையேறப் பெற்ற பழைய நண்பர்...'' என்று எண்ணி னேன். அவர் முதலாம் உலக யுத்தத்தின் போர் வீரர், மிகவும் தீரமுள்ளவர்... அவருடைய குடும்பம். அவர் கிறிஸ்துவின் சரீரத் தின் அங்கத்தினர் என்றும் தேவனை சந்திக்க ஆயத்தமுள்ள வராயிருக்கிறார் என்றும் நான் அறிந்து அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். “இப்பொழுது என் விலையேறப் பெற்ற சகோதரர் இங்கிருந்து செல்லப் போகிறார்'' என்று எண்ணினேன். அது அந்த தரிசனத்துக்குப் பிறகு... பரலோகத்தைத் குறித்த அந்த தரிசனம் எனக்குக் கிடைப்பதற்கு முன்பு. அவரைக்காண நான் சென்றிருந்தேன். அப்பொழுது அந்த அறைக் குள் வானவில் வந்தது. தேவன் காரியங்களை மாற்றிப் போட்டார். அது 13 மாதங்களுக்கு முன்பு. அவர் இன்றும் இவ்வுலகில் இருந்துக் கொண்டு, உணவு உண்டுகொண்டிருக்கிறார். 21. அவர் ஏதோ ஒரு விதமான... ஒரு விதமான கந்தக மாத்திரை உட்கொண்டார். அது அவருடைய தொண்டையை எரித்துவிட் டது. அவர் இன்று காலை ஜெபவரிசையில் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். பில்லி ஏற்கனவே ஜெப அட்டைகளை.... அவர்கள் ஜெப அட்டைகளை விநியோகிக்கப் போகிறார்கள் என்றால், அதை நான் அறிந்துக்கொண்டு அறிவிப்பேன். எனவே அவர்களிடம் வரும்படி கூறினேன். அவருடைய மருமகனும் என் நல் நண்பரு மாகிய சகோ. க்ரீச்சிடம், அவரைக் கொண்டு வரும்படி கூறினேன். அவரை ஜெப வரிசையில் காணத் தவறினால், அவரைப் பிடித்து வந்து இந்த ஜெப அறைகள் ஒன்றில் போடலாம் என்று எண்ணினேன். ஆனால் அவர் ஜெப அட்டை ஒன்றை பெற்றுக் கொண்டார். எனவே நான், 'பஸ்டி, நீங்கள் வர வேண்டுமென்று விரும்புகிறேன்' என்றேன். அவருடைய பெயர் எவரட். அவரை நாங்கள் சுருக்கமாக பஸ்டி என்று அழைப்பது வழக்கம். அவர்... நான் அவரிடம், “நீர் ஜெப வரிசையில் வாரும். அதற்கான, அந்த அபிஷேகம் இருக்கும்போதே நான் உமக்கு ஜெபம் செய்வேன்'' என்றேன். அதை நான் பெற்றிருக்க விரும்புகிறேன். எனக்கு யாராகிலும் ஜெபிக்க நேர்ந்தால், அவர்கள் எனக்காக ஜெபிக்கும் நேரத்தில் அவர்கள் மேல் அபிஷேகம் தங்கியிருப்பதையே நான் விரும்புவேன்.  22. இன்று காலை நாம் வேதாகமத்தை திருப்புவோம்... ரூத்தின் புத்தகத்துக்கு திருப்புவோம். இந்த புத்தகத்திலிருந்து சில வேத வசனங்களை நான் படிக்கப் போகிறேன். இந்த பொருளை நாம் அணுகுவதற்கு முன்பு இன்று காலைக்கான என் பொருளின் தலைப்பை அறிவிக்க விரும்புகிறேன். அது இனத்தான் மீட்பர் என்னும் தலைப்பு கொண்டது. இந்த மீட்பைக் குறித்த நான்கு வெவ்வேறு கருத்துக்களின் வாயிலாக அணுக விரும்புகிறேன்.  23. யோசித்துக் கொண்டிருந்தேன்... நம்மை மீட்பதெற்கென கிறிஸ்து எவ்வாறு வந்தார் என்பதைக் குறித்து சென்ற ஞாயிறு பிரசங்கித்தேன். ஆகவே பிறகு, இன்றைக்கு நான் பேச விரும்புவது: மீட்பர் என்றால் என்ன? அவர் எப்படி ஒரு மீட்பர் ஆனார்? ஆகவே, நினைவில் கொள்ளுங்கள். ஒரு மீட்பர், உங்களை அவர், உங்கள் பாவங் களினின்றும், எல்லாவற்றினின்றும் உங்களை முழுமையாக மீட்கின்றார். அவர் தான் மீட்பர் ஆவார். 24. இப்பொழுது இதை நாம் அணுகும் முன்பு, நாம் தலை வணங்கி ஜெபத்தின் மூலம் அவருடன் பேசுவோம். தலை வணங் கியிருக்கும் இந்நேரத்தில், எத்தனை பேர் அவருடைய சமூகத்தில் இன்று காலை நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களையுயர்த்தி, “தேவனே, என் விண்ணப்பத்தை அறிந்திருக் கிறீர்'' என்று சொல்லுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.  25. எங்கள் பரலோகப் பிதாவே, ஒரு மகத்தான உன்னத வல்லமை இருப்பதற்காக இன்று நான் மிகவும் மகிழ்வுறு கிறேன்.... அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாய் நாங்கள் அணுக முடியுமென்றும் நாங்கள் கேட்பதற்கு நீர் உத்தரவு அருளுவீர் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். கடந்த கூட்டத்தில் நாங்கள் பேசினோம்... எவ்வாறு மனிதர் செம்மறி யாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டத் தோல்களையும் போர்த்துக் கொண்டு பரதேசிகளாகத் திரிந்து, தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு காத்திருந்தார்கள் என்றும், அவரை அவர்கள் ஒரு முறையாவது அணுக முடியுமானால், அவர் எங்கிருக்கிறார் என்று கண்டு கொள்ள கூடுமானால்... பழைய காலத்து யோபு கூறினது போல், “நான் அவருடைய வாசற் கதவைத் தட்ட முடிந்தால்''. வேறுவிதமாக கூறினால், “அவர் எங்கே தங்கியிருக்கிறார் என்று நான் அறிய முடிந்தால், நான் அவருடன் வீடு சென்று அவரோடு முகமுகமாய் பேசுவேன்''. ஆனால் அப்படிச் செய்ய மனிதனுக்கு வழியே இருக்கவில்லை. ஏனெனில் அவன் பாவம் செய்து, தன்னைப் பிரித்துக்கொண்டு, தேவனுக்கு அந்நியன் ஆனான்.  26. ஆனால் அந்த விலையேறப்பெற்ற ஒருவராகிய அவர் தாமே வந்து வழியைத் திறந்து நம்முடைய பாவங்களை மன்னித்து, அவர் மூலமாக நாம், அந்நியர்களாக இல்லாமல் தங்கள் தகப்பனிடம் வருகின்ற பிள்ளைகள் போல, தேவனுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டோம். நாங்கள் ஏறெடுக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும், அவர் உத்தரவு அருளுவார் என்று அறிந் திருக்கிறோம். ஒரே ஒரு கட்டளை மாத்திரம் கொடுக்கப்பட் டுள்ளது, அதாவது "நீ விசுவாசித்தால்'' அதுதான் ஒப்பந்தம். நாங்கள் விசுவாசிக்கமாட்டோம் என்று சாத்தான் கூறுகிறான், நாங்கள் விசுவாசிப்போம் என்று தேவன் உரைக்கிறார். இந்த யுத்தமானது நடந்து கொண்டேயிருக்கிறது. தீர்மானம் செய்ய வேண்டியவர்கள் நாங்கள். நாங்கள் எந்த விதத்தில் தீர்மானம் செய்கிறோமோ அந்த விதமாகவே அது நடக்கும். 'விசுவாசிக்கிற வனுக்கு எல்லாம் கூடும்'' என்று அற்புதமாகவே எழுதப் பட்டுள்ளது. இன்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.  27. ஆகவே நாங்கள் விசுவாசித்து, இன்று, தெய்வீக உதவிக்காக உம்மை அணுகுகின்றோம். எங்களுடைய விண்ணப்பங்களை உன்னிப்பாக நோக்க நாங்கள் கேட்கின்றோம். உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கரத்தின் கீழும் என்ன உள்ளது, அதன் அர்த்தம் என்ன வென்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஏனெனில் நீர் இருதயத்தின் சிந்தனைகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறவராய் இருக் கிறீர்'' என்று எழுதப்பட்டுள்ளது. தேவனே, உமது ஐசுவரியத் தின்படியும் உமது கிருபையின்படியும் ஏறெடுக்கப்பட்ட ஒவ் வொரு விண்ணப்பத்துக்கும் உத்தரவு அருளுமாரு வேண்டிக் கொள்கிறோம். 28. கர்த்தாவே, எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று இன் றைக்கு வேண்டிக்கொள்கிறோம். ஒருக்கால் கூட்டத்தில் உள்ள அனைவரிலும் அதிக தேவையுள்ளவன் நானே. கிரயத்துக்கு கொள்ளப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் எனக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன். இங்கு ஒருக்கால் பாவிகள் உட்கார்ந்து இருக்கக் கூடும். அவர்களை சாத்தான் தன் வல்லமையினால் பாவத்தின் கயிற்றினால் கட்டி யிருக்கும் காரணத்தால், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் நிலை மைக்கு இவர்கள் வருவது கடினமாக இருக்கக்கூடும் அல்லது அது கூடாத காரியமாகவே இருக்கலாம். ஆனால் “என் நாமத் தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்'' என்று எழுதப்பட்டுள்ள தென்று நான் அறிந்திருக்கிறேன்.  29. கர்த்தாவே, வார்த்தையை பிரசங்கிப்பதன் மூலம் சந்தேகம், சடங்காச்சாரம் என்னும் ஒவ்வொரு பிசாசைத் துரத்தவும், ஜனங்களின் இருதயங்களிலும் சிந்தையிலுமிருந்து பயத்தைத் துரத் தவும், இன்றைக்கு எங்களுக்கு வல்லமையை அளியும். குழப்பத்தினாலும் சந்தேகத்தினாலும் கட்டுண்டவர்கள் கிறிஸ்துவின் கரங்களில் கொண்டு வரப்படுவார்களாக. “வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார் கள்'' என்று எழுதப்பட்டிக்கிறது. இங்கே வியாதி என்னும் பிசாசு களினால் கட்டப்பட்டிருக்கின்ற கிறிஸ்தவர்களும் இங்கே இருக் கின்றனர். 30. கர்த்தாவே, இன்றைக்கு கட்டிடத்திலுள்ள வியாதியஸ்தர், அவதியுறுவோர் ஒவ்வொருவரையும் விடுவிக்க பரிசுத்த ஆவியின் வல்லமையை இன்று எனக்கு தந்தருளுவீராக. அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே தெய்வீக சமூகத்திலுள்ள ஒவ்வொரு வரின் இருதயத்திலும் முதலிடம் வகிப்பாராக. உமது வசனத்தின் மூலம் எங்களோடு பேசும். உமது வசனமே சத்தியம். என்ன சொல்வதென்று தெரியாமல், பரிசுத்த ஆவியானவர் எங்களை வழிநடத்தி, சகல சத்தியத்துக்குள்ளும் எங்களை நடத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். கர்த்தாவே, இதை அருளும். மகிமையை நீரே எடுத்துக் கொள்ளும். உமது ஊழியக்காரனை அபிஷேகியும். உமது வார்த்தை ஏற்கனவே அபிஷேகிக்கப்பட்டுள்ளது. அதை எங்கள் தேவைக்கேற்ப ஒவ்வொரு இருதயத்துக்கும் நீர் கொண்டு செல்லும்போது, உமக்கு துதியை நாங்கள் ஏறெடுப்போம். இதை தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 31. வேதாகமத்தை படிப்பதற்கு முன்பு, எனக்கு பிடித்தமான அர்த்தங்கொண்ட இந்த சிறு வாக்கியத்தை கூற விரும்புகிறேன். உங்களால் கடக்க முடியாத ஆறுகளும் ஏற முடியாத மலைகளும் இருக்குமானால், மற்றவர்கள் செய்ய முடியாததை செய்வதில் பரலோகத்தின் தேவன் விசேஷித்தவர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்.  32. நான் ரூத்தின் புத்தகம், முதலாம் அதிகாரத்திலிருந்து படிக் கிறேன். நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பெயர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன். யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்து விட்டார்கள். நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான். அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி பேர் ஓர்பாள், மற்றவள் பேர் ரூத். அங்கே ஏறக்குறைய பத்து வருஷம் வாசம் பண்ணினார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்து போனார்கள். அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.  கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப் தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடே கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப் போக, அவர்கள் வழி நடக்கையில், நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிப் போங்கள். மரித்துப் போன வர்களுக்கும் எனக்கும் தயை செய்தது போல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக.  கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டார்கள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து, உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள். அதற்கு நகோமி; என் மக்களே, நீங்கள் திரும்பிப் போங்கள். என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்கு புருஷராகும்படி இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ? என் மக்களே, திரும்பிப் போங்கள், நான் வயது சென்றவள். ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல, அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப் படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது, என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக் கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.  அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள். ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப் போனாள், ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள். அப்பொழுது அவள்; இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத் துக்கும் தன் தேவர்களிடத்திற்கும் திரும்பிப் போய்விட்டாளே, நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப் போ என்றாள். அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னோடே பேசவேண்டாம், நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம், உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.  நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குக் செய்யக்கடவர் என்றாள். ரூத்.1:1-17. 33. இந்த சிறு பேச்சை இன்று காலை உங்களுக்குப் போதித்து, மீட்பைக் குறித்த விசுவாசம் என்னவென்றும், அதை எப்படி பெற்றுக் கொள்வதென்றும் கூறி, அதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இதற்கு “இனத்தான் மீட்பர்'' என்று தலைப்பு கொடுக்கிறேன். 34. ஏதாவதொன்றை மீட்பதென்றால், அதை “மறுபடியும் கொண்டு வருவது” என்று அர்த்தம் - இழந்து போன ஒன்றையோ அல்லது அடகு கடையில் அடமானம் வைத்த ஒன்றையோ. நீங்கள் சென்று அதை மீட்கிறீர்கள். அது கிரயம் கொடுத்து மீட்கப் படுகிறது. அதை நீங்கள் மீட்ட பிறகு அது உங்களுடைய சொந்த பொருளாகி விடுகிறது. ஆனால் இஸ்ரவேலின் மீட்பின் சட்டம்... இழந்து போன ஒன்றை அல்லது ஒரு சொத்தை ஒரு இனத்தான் தான் மீட்க வேண்டும்.  35. நம்முடைய கதை யோசுவாவின் மரணத்திற்குப் பின்பு இஸ்ரவேல் ஜனங்களை ஆண்ட நியாயாதிபதிகளின் காலத்தில் தொடங்குகிறது. இதைக் குறித்து ஒரு அழகிய காட்சியைக் காண வேண்டுமென்றால், சாமுவேலின் முதலாம் புத்தகம் முதல் ஐந்து அல்லது ஆறு அதிகாரங்களைப் படியுங்கள். அப்பொழுது உங்களுக்கு உண்மை வரலாறு விளங்கும்.  36. ஆனால் நாம் அதைத் தாண்டிச் சென்று, இதிலிருந்து முக்கியமான பொருளை மாத்திரம் சிந்திக்கப் போகிறோம். சில நாட்களுக்கு முன்பு நான் ரூத்தின் புஸ்தகத்தின் பேரில் பிரசங் கிக்கத் தொடங்கி, மூன்று நான்கு வாரங்கள் அதை விளக்கினேன். ஒரு முறை நான் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தின் பேரில் பிரசங்கிக்கத் தொடங்கி, அதை முடிக்க ஒரு ஆண்டு முழுவதும் எடுத்துக் கொண்டேன். அதிலுள்ள ஒவ்வொரு வேத வசனமும் வேதம் முழுவதிலுமுள்ள மற்ற வேத வசனங்களுடன் இணை கின்றது. அது அழகாயுள்ளது. ஆகவே வேதாகமம் பரிசுத்த ஆவி யின் ஏவுதலினால் எழுதப்பட்டதென்று நாம் அறிந்துக் கொள்கி றோம். ஏனெனில் கணிதப் பிரகாரமாகவும் ஒவ்வொரு வழியிலும்... ஏதாவதொரு இடத்தில் முரண்பாடாய் இராத வேறு எந்த இலக்கியமும் இதுவரை எழுதப்படவேயில்லை. 37. இந்த வேதாகமம் நாலாயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட புத்தகங்களைக் கொண்டது. அவை சிலரால் எழுதப்பட்டன... எத்தனை பேர் அதை எழுதினார்கள் என்று எனக்கு மறந்து விட்டது. முன்பு எனக்கு ஞாபகமிருந்தது, ஆனால் இப்பொழுது... நான் வருந்துகிறேன். அறுபது சொச்சம் பேர் என்று நினைக்கிறேன். ஒருக்கால் நான் தவறாய் இருக்கலாம், (ஒரு சகோதரன் “நாற்பது'' என்கிறார் - ஆசி) நாற்பது! சில ஆயிரம் ஆண்டுகளில் நாற்பது பேர் வேதாகமத்தை எழுதினர். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை, ஒருவரையொருவர் காணவில்லை, ஒருவர் எழுதினதை மற்றவர் பலமுறை படிக்கவில்லை. எனினும், ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தைக்கு முரணாயிருக்கவில்லை. அது பரிசுத்த ஆவியின் ஏவுதல்!  38. பலர் ரூத்தின் புத்தகத்தை பார்த்துவிட்டு, “அது வேதாக மத்தின் காதல் கதை என்கின்றனர். வேதாகமமே ஒரு காதல் ஆகும். முழு வேதாகமமே ஒரு காதல் கதையாகும்.  39. அது காதல் கதை மாத்திரமல்ல, ஆனால் அது தீர்க்கதரி ஆகும். அது தீர்க்கதரிசி மாத்திம் அல்ல, ஆனால் வரலாறு கூட அது ஒரு-ஒரு காதல் கதை மாத்திரம் அல்ல, ஒரு வரலாறு, ஒரு தீர்க்கதரிசி, அது தேவன் தாமே ஆகும். ஏனெனில் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது.'' ஆதலால், வார்த்தையானது, அச்சு வடிவில் தேவன் இருப்பதாகும். சகோதரனே, அது காரியத்தை முற்று பெறச் செய்ய வேண்டும். அச்சு வடிவில் தேவன். ஒரு புத்தகத்தில் யெகோவா அச்சடிக்கப்பட்டிருக்கின்றார். ஆகவே எதுவும் அதில் ஏதோ ஒருவிதமான கட்டுக்கதை அல்ல, ஆனால் அவை எல்லாமே முற்றிலுமான சத்தியம் ஆகும். அதிலுள்ள ஒவ்வொரு அம்சமும் உங்கள் ஆத்துமாவைக் கவர்கிறது. அது அங்கேயிருக்கின்றது. அதுதான் சத்தியமாகும். தேவன் தம்முடைய வார்த்தையை ஆதரிப்பார்.  40. பரிசுத்த மனிதர்கள் பழைய ஏற்பாட்டை ஒன்று திரட்டின போது, பழைய சுருள்களில் எழுதப்பட்ட இந்த வரலாறு.... ரூத்தின் புத்தகம் மிகவும் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏன்? அது வெறும் காதல் கதையாக இருக்கு மானால், எழுத்தாளர்களும் பண்டைய பரிசுத்தவான்களும், இந்த புத்தகம் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டதென்று ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஏனெனில் அதில் ஒரு வெளிப்பாடு மறைந்துள்ளது. மறைக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டிலுள்ள உண்மையான அர்த்தத்தை நீங்கள் கிரகித்துக் கொண்டால், அது உங்களை தேவனுக்கு மிகவும் அருகாமையில் கொண்டு வரும்.  41. தேவன் தாமே ஒவ்வொரு இருதயத்தையும் வசீகரித்து, அவர் இந்த வரலாற்றில் என்னவாயிருக்கிறார் என்றும், அவர் உங்களுக்கு என்னவாயிருக்கிறார் என்றும், அவரை எப்படி ஏற்றுக்கொள்வ தென்றும், தம்மை வெளிப்படுத்தித் தருமாறு இன்று காலை என் முழு இருதயத்தோடும் வேண்டிக்கொள்கிறேன். அதை நீங்கள் ஒருமுறை கண்டுக்கொண்டால், இவ்வளவு எளிமையான ஒன்றை நீங்கள் எவ்வாறு காணத் தவறினீர்கள் என்று வியப்பீர்கள். ஆனால் அது பரிசுத்த ஆவியின் மூலமே வெளிப்படும்.  42. இப்பொழுது பலர் வேதாகமத்தை படிக்கின்றனர்... அவர்கள் எழுந்து நின்று பக்கம் பக்கமாக படிக்கின்றனர். நீங்கள் அப்படி புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அது விடுகதை களாக உள்ளது. தேவன் அப்படி செய்துள்ளதற்காக இயேசு அவரை ஸ்தோத்தரித்தார். அவர், “நீர் அவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து கற்று கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினீர்'' என்றார். 43. நான் அடிக்கடி கூறுவது போன்று, இன்று காலை திருமதி பிரான்ஹாம் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கையில், அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதுவார்கள். அவர்கள், “அருமை பில், இன்றிரவு பிள்ளைகளுடன் நான் இங்கே அமர்ந்திருக்கின்றேன். நான் உங்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்'' என்று எழுதுவார்கள். அவளை நான் நேசிக்கிறேன். அவளை நான் நன்கு அறிந்திருப்பதால், அவள் வரிகளுக்கு இடையில் எழுதியுள்ள இரகசியங்களை என்னால் படிக்க முடியும். அவள் இங்கு அதை எழுதினாலும் எழுதாவிட்டாலும், அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்கு அப்படியே தெரியும். பாருங்கள்? அது ஏன் அப்படி? அது நெருங்கிய தொடர்பு. நாங்கள் ஒருவரே. பாருங்கள்? அவள் என் சுபாவத்தை அறிந்திருக்கிறாள். நான் அவள் சுபாவத்தை அறிந்திருக்கிறேன். அவள்... அவள் உட்கார்ந்துக்கொண்டு என்னைப் பார்த்தால் போதும், அவள் என்ன கூறப் போகிறாள் என்று நான் சொல்லி விடுவேன். பாருங்கள்? ஏனெனில் அவளை நான்- நான் அவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறேன். அவளும் அதையே செய்ய முடியும். அதற்குக் காரணம் என்ன? ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள திடமான நம்பிக்கை. அன்பு!  45. நேற்று காலை நாங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்க தாமதமாயிற்று. பிள்ளைகளுக்கு நேற்று பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் வெவ்வேறு காரியங்களைக் குறித்து பேசிக் கொண்டிருந் தோம். அவைகளில் ஒன்று... “வெறுப்பு என்பது என்ன?"  46. நான் வெறுப்பு என்பதற்கு ஒரு தொடக்கம் உண்டு, எனவே அதற்கு ஒரு முடிவு இருக்க வேண்டும். ஆனால் அன்புக்கோ தொடக்கம் இல்லை, எனவே அதற்கு முடிவும் இல்லை. வெறுப்பு காலாகாலங்களில் இருக்க வகையுண்டு. ஆனால் அன்பு நித்தியமானது. வெறுப்பு தொடங்கி முடிவு பெறுகிறது. அன் புக்கு தொடக்கம் இல்லாததால் அது முடிவு பெறுவதில்லை'' என்றேன். பாருங்கள்? அது நித்தியமானது.  47. ஒரு ஆண் அழகுக்காக ஒரு பெண்ணை மணக்கும்போது, அதற்கு ஒரு முடிவு இருக்கும். ஆனால் அவன் தன்னை அறியாமலேயே ஒருத்தியிடம் அன்புக் கொள்ளும்போது, அதே போன்று அவளும், அவனுடைய தோற்றம் எப்படியிருந்தாலும், அவனிடம் அன்பு கொள்ளும்போது, அவன் அவள் மீது அன்பு கொள்கிறான், அவளும் அவன் மீது அன்பு கொள்கிறாள். அது மகிமையில் நித்திய துணைவன் அல்லது துணைவியாக இருக்கும்.... மரணமோ அல்லது வேறெதுவும் அவர்களைப் பிரிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் நித்தியத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் காலம் என்பதற்குள் காலடி வைத்து, மறுபடியும் நித்தியத்திற்கே திரும்பிச் சென்று விடுகின்றனர். நித்தியம் என்பது காலம் என்னும் சரீரத்தில் கீழே விழுந்து, மறுபடியும் மேலே நித்தியத்துக்கு சென்றுவிடுகிறது. அது ஒருக்காலும் அழியாது.  48. ஒரு அழகுள்ள ஸ்திரீ, அந்த அழகு நிச்சயமாக குறைந்து விடும். நீங்கள் அதற்கு சில ஆண்டுகள் அளிக்கலாம். ஒருக்கால் இன்றைக்கு அவள் அரை நிர்வாணியாய் தெருவில் உடலை நெளித்து நடந்து சென்று நாட்டில் உள்ள எல்லா மதுக் கடைகள் அனுப்புவதைக் காட்டிலும் அதிக ஆத்துமாக்களை நரகத்துக்கு அனுப்பக் கூடும். அவள் அப்படி உடலை நெளித்து நடக்கும்போது தான் யாரோ என்னும் உணர்வு அவளுக்கு இருக்கக்கூடும்... ''அவர்கள் கழுத்தை நெறித்து நடந்து, ஒய்யாரமாய் நடப்பார்கள்'' என்று வேதம் கூறுகிறது. (ஏசா.3:16) வேத வசனங்களை நிறை வேற்றிக்கொண்டு, அதே சமயத்தில் அதை அறியாதிருக்கிறார்கள். அவர்கள் சீர்கேடான உடைகளை அணிந்து முற்றத்தில் நின்று கொண்டிருப்பார்கள். மனிதர் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பர். அதை அவர்கள் அறியாதிருப்பர். அவள் தன் புருஷனுக்கோ அல்லது தன் சிநேகித பையனுக்கு (boy friend) மிகவும் உத்தமியாக- கற்புள்ளவளாக இருந்திருக்கலாம். ஆனால் நியாயத் தீர்ப்பின் நாளில், நூற்றுக்கணக்கான ஆண்களுடன் அவள் விபச்சாரம் செய்ததற்கு பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் மேல் ஒரு ஆவி தங்கியுள்ளதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். “நிர்வாணியும், குருடாயும் இருப்பதை அறியாமலிருக்கிறாய்'' என்று வேதம் கூறுகிறது. பரிதாபமான பாகம் என்னவெனில், அதை அறியாமலிருப்பதே.  49. தேவன் அந்த பெண்ணுக்கு அளித்த அழகிய உருவம் கொண்ட அந்த உடல், அடுத்த ஞாயிறுக்குள் அழுகிப் போக வகையுண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? உயரமான, கறுத்த, அழகிய தேகக்கட்டு கொண்ட மனிதன் அடுத்த ஞாயிறுக்குள் குப்பை கூளமாக ஆக வகையுண்டு. இவையனைத்தும் அழிந்து போகும். ஆனால் உள்ளே இருக்கின்ற அது, தேவன் - அன்பு, நித்திய காலமாய் வாழ்கின்றது. எனவே உள்ளேயுள்ளதன் பேரில் கவனம் செலுத்துங்கள். அந்த நோக்கத்தின் மேல் உங்கள் கண்களை வையுங்கள். 50. இந்த கதையானது இப்படி தொடங்குகிறது. நகோமி என்னும் பெயருடைய அன்புக்குகந்த, இனிமையான ஸ்திரீ ஒருத்தி இருந்தாள். நகோமி என்றால் “இன்பகரமானவள்'' என்று பொருள். அவளுடைய கணவன் பெயர் எலிமெலேக்கு. அப்படி யென்றால் “வழிபாடு” என்று பொருள். அவளுடைய குடும்பம் இன்பரகமான வழிபாடாய் விளங்கினது. அவர்களுக்கு மக்லோன் என்னும் குமாரன் இருந்தான் .... 'வியாதி'' என்று பொருள். மற்றொருவன் கிலியோன். அப்படியென்றால் “களைப்பு, துக்கம், வருத்தம்'' என்று பொருள். அதுதான் அவர்கள் குடும்பம்.  51. இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று. ஒரு யூதன் செய்யும் முதல் தவறு தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறு வதே. தேவன் அவர்களுக்கு அந்த தேசத்தைக் கொடுத்தார். ஆபிரகாமுக்கு அந்த தேசம் கொடுக்கப்பட்ட போது, அவன் அந்த தேசத்தை விட்டு வெளியேறக் கூடாதென்று தேவன் அவனுக்கு கட்டளையிட்டார். ஆனால் அவனோ கேராருக்கு போகும் தவறைச் செய்து தொல்லையில் அகப்பட்டுக் கொண்டான். ஒரு யூதன் பாலஸ்தீனாவை விட்டு வெளியே செல்லக் கூடாது. அது அவனுக்கு அளிக்கப்பட்ட இடம்.  52. அவர்கள் உலகெங்கும் விரட்டியடிக்கப்பட்டு, இப்பொழுது தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஓ, இன்று காலை நமக்கு ஒரு அழகான வரலாறு இங்குள்ளது, அவர்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 53. நகோமி பஞ்சத்தின் காரணமாக வெளியே சென்றாள்அவளும் எலிமெலேக்கும். அவர்கள் மோவாப் தேசத்துக்கு சென்றனர். 54. இந்த கதையின் முக்கிய அம்சத்துக்கு வருவோம்... நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அது என்னவென்று கிரகித்துக் கொள்வீர்கள். இப்பொழுது மோவாபியர் முறை தவறிப் பிறந்த குழந்தை யிலிருந்து தோன்றினர். அது லோத்தின் பிள்ளை. அவர்கள் தேவனுடைய கிருபையால் சோதோமின் அக்கினியிலிருந்து தப்பின பிறகு, லோத்தின் குமாரத்திகள் தங்கள் தகப்பனுக்கு குடிக்கக் கொடுத்து அவனுடன் மனைவியைப் போல் வாழ்ந்தனர். அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்தது. அவர்களின் ஒருவ னான மோவாபிலிருந்துதான் மோவாபிய ஜாதி தோன்றினது. அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கருதப்பட்டனர், ஆனால் அஞ்ஞான கொள்கைகளுடன் கலந்திருந்தனர். பாருங்கள். இஸ்ரவேலருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு அளிக்கப்பட்ட தேசம் எவ்வளவு மோசமான நிலையிலிருந்த போதிலும், அதை விட்டு பிரயாணம் செய்து வேறொரு தேசத்தில் குடியேறினது தொல்லையை விளைவித்தது.  55. ஆகவே எந்த சமயத்திலும் ஒரு விசுவாசி தேவனால் அளிக்கப்பட்ட தன்னுடைய ஸ்தானத்தை விட்டு அகன்று போவான் என்றால்! அநேக சமயங்களில் அரசியல், இந்த தேர்தல் போன்றது வருகின்றது. ஒரு நல்ல மனிதன் நல்ல மனிதனாகவே இருக்கலாம். ஆனால் அவன் இந்த இடத்தை விட்டு விலகிச் செல் கிறான். எனக்குத் தெரிந்த ஒரு போதகர் உண்டு. அவர் நகராண் மைக் கழகத் தலைவர் தேர்தலுக்கு நின்றார். அவர் அப்படி செய்த போது, தமக்கு அளிக்கப்பட்டிருந்த போதக உத்தியோகத்தை விட்டு விலகினார். சாத்தான் அவரை மேற்கொண்டான். 56. எந்த ஒரு கிறிஸ்தவனும் அளிக்கப்பட்ட இடங்களை விட்டு அகன்று சென்றால், “நல்லது, இன்றிரவு சென்று, நீச்சல் குள அறையில் பையன்களுடன் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருக் கப் போகிறேன். சிறிது மது அருந்துவதனால் பாதகம் ஒன்று மில்லை” என்று கூறுவானானால், நீங்கள் உங்கள் இடத்திலிருந்து விலகிச் செல்கின்றீர்கள். திரும்பி வாருங்கள். தொல்லைக்கான உங்கள் வழியை நீங்களே அமைத்துக் கொள்கிறீர்கள். 57. “ஓ, மற்ற பெண்கள் புகை பிடிக்கின்றார்கள், நானும் ஒரு சிகரெட்டை புகைத்துப் பார்க்கிறேன்''. நீங்கள் இடத்திலிருந்து விலகிவிட்டீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். உங்கள் சொந்த இருப்பிடங்களிலே நிலைத்திருங்கள். “ஓ, இங்குள்ள அனைவரும் என்னை பழைய நாகரீக கிழவி' என்கின்றனர். அவர்கள் என்னை “பழமை நாகரீகம் கொண்டவன்'' என்றழைக்கின்றனர்.'' பரவா யில்லை, என்னவானாலும் அதில் நிலைத்திரு! அதுதான் உன் இடம். கிறிஸ்துவுக்குள் தங்கியிரு.  58. நகோமி பஞ்சத்தின் காரணமாக, தன் நாட்டை விட்டு வெளியேறி ஆகாரம் தேடி மோவாப் தேசத்துக்கு சென்றாள். அவள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் மற்றவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமில் தங்கியிருந்தார்கள். பெத்லெகேம் என்றால்: பெத்தேல் என்றால் “தேவனுடைய வீடு" என்று பொருள். துதிகளின் வீடு. அவர்கள் அங்கு வசித்தனர். 59. அவள் தன் கணவனுடன் வெளியேறினாள். அவளுடைய இரண்டு குமாரர்களும் மோவாபிய பெண்களை மணந்தனர். ஏதாவதொன்று நடக்க வேண்டுமென்று தேவன் தீர்மானித் திருந்தால், அது எப்படியும் நடந்தே தீரும். ஆகையால் தான் நான் முன்குறித்தல், தேவனுடைய முன்னறிவு ஆகியவைகளில் நிச்சயம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.  60. பிறகு மரணம் குடும்பத்தை தாக்கினதாக நாம் காண் கிறோம். அப்பொழுது அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வரு கின்றனர். குமாரர்கள் மரிக்கின்றனர்... இரண்டு பையன்களும் இறந்து விட்டனர், தகப்பனும் இறந்து விட்டார். நகோமி ரூத்துடனும், ஓர்பாளுடனும் புறப்படுகிறாள்.  61. இன்று காலை நான் வயது சென்ற நகோமியை வைதீக சபையாகிய யூத வைதிக சபைக்கும், புறஜாதியாகிய மோவா பியரைச் சேர்ந்த ரூத்தை கிறிஸ்தவ சபை, புது சபைக்கும் ஒப்பிட விரும்புகிறேன்.  62. இதை நான் நான்கு வெவ்வேறு அம்சங்களில் அணுக விரும்புகிறேன். ரூத்... இதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். ரூத் - தீர்மானம் செய்தல் (அவள் தீர்மானிக்கிறாள்), ரூத் - சேவை செய்தல், ரூத் - இளைப்பாறுதல், ரூத் - பலனைப் பெறுதல். நாம் மறுபடியும் கூறுவோம். ரூத் - தீர்மானம் செய்தல், அவள் தீர் மானம் செய்த பிறகு, ரூத் - சேவை செய்தல், அதன் பிறகு ரூத் இளைப்பாறுகிறாள், முடிவில் ரூத் பலனைப் பெறுகிறாள்.  63. இப்பொழுது, அந்த வரலாற்றில் ஒரு நேரம் வருகிறது. ரூத் சபைக்கு அல்லது கிறிஸ்தவனுக்கு அடையாளமாக இருக்கிறாள்... எவ்வாறு ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் முழு கிறிஸ்தவ தேசத்திற்கு பிரதிநிதியாயிருக்கின்றனரோ அவ்வாறே. பிரதிநிதியாக இருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் நடத்தையில், நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திலும் உங்கள் செய்கையிலும், கிறிஸ்துவின் சரீரம் முழுவதற்கும் பிரதிநிதியாக விளங்குகின்றீர்கள். நீங்கள் “நான் ஒரு சாதாரண அங்கத்தினன் மாத்திரமே'' எனலாம். அதனால் பரவாயில்லை. நீங்கள் கிறிஸ்த வன் என்னும் பெயரைச் சூடிக் கொள்ளும்போது, கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் பிரதிநிதிகளாயிருக்கிறீர்கள். நீங்கள் அதன் பிரகாரம் வாழவேண்டும். நீங்கள் நற்பண்புள்ள மனிதராகவும் ஸ்திரீகளாகவும் வாழவேண்டும். உலகத்தின் காரியங்களை செய்யவே செய்யாதீர்கள். ஏனெனில் பரலோகத்தின் கண்கள், பூலோகத்தின் கண்கள் இவையனைத்தும், நீங்கள் கிறிஸ்தவர் களாக நடந்து கொள்கிறீர்களா என்று காண உங்களையே நோக்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு பலவீனமாயிருந்த போதிலும், நீங்கள் எவ்வளவு சிறியவராயிருந்தபோதிலும், தலை நிமிர்ந்து நில்லுங்கள். ஏனெனில் நீங்கள் ஒரு கிறிஸ்தவர்.  64. இப்பொழுது, ரூத் ஒரு அஞ்ஞானி. அவள் விக்கிரகங்களை வழிபட்டாள். ஓர்பாளும் அப்படியே. அவர்கள் தங்கள் மாமியாரு டன் திரும்பி வந்து கொண்டிருந்தனர். யூதாவிலுள்ள பெத்லெ கேமில் தேவன் வாதையை எடுத்துப் போட்டார் என்றும், அங்கு ஜனங்களுக்கு உண்ண ஆகாரம் உள்ளதென்றும் நகோமி கேள்விப் பட்டாள். அங்கே அவள் சுமார் பத்து ஆண்டுகள் இருந்தாள். ''சுமார் பத்து ஆண்டுகள்'' என்று வரலாற்று அறிஞரான ஏர்ஹேயிம் (Eersheim) கூறுகிறார்.  65. அவள் வருத்தத்துடன் (அவள் கணவன் இறந்து போனான், குமாரர்களும் இறந்து போயினர்) தன் இரண்டு மருமக்களுடன் திரும்ப வருகிறாள். அவள் அவர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்கள் ஏன் என்னுடன் வருகிறீர்கள்? உங்களுக்கு தொல்லையேயன்றி வேறொன்றும் இருக்காது. கர்த்தருடைய கை எனக்கு விரோதமா யிருக்கிறதினால் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது” என்றாள்.  66. அது தேவனுடைய திட்டம் என்று அறியாமல் எத்தனை முறை இஸ்ரவேல் அப்படி நினைத்திருக்கிறது? எருசலேமுக்கு வெளியே அழுகையின் சுவர் (Weeping Wall) இன்னும் அங்கே இருக்கிறது. தேவாலயத்தின் பழைய கற்களைப் பொறுக்கி அவர்கள் அந்த சுவற்றைக் கட்டினார்கள். ஆகவே “யேகோ வாவே!'' என்று யேகோவாவை நோக்கி கெஞ்சி கதறுகின்ற அந்த யூத கரங்களினாலும், கண்ணீர்களினாலும் அது வழவழப்பாக, தேய்ந்து காணப்படுகிறது. அவர்களுடைய நேரம் சமீபித்து விட்டது என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அழுகை யின் சுவர் கட்டப்பட்டுள்ள கற்களைக் கொண்டு ஒரு காலத்தில் உடன்படிக்கை பெட்டியின் வாசஸ்தலம் கட்டப்பட்டிருந்தது. தாவீது ராஜா இந்த கற்களை நோக்கிப் பார்த்தான். “ஓ, யேகோ வாவே, நீர் எங்கே?'' என்று அவர்கள் கதறுகின்றனர். பாருங்கள், அவர்களுடைய ராஜா, அவர்களுடைய மீட்பர் விரைவில் திரும்ப வருவார் என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அவர்கள் சிறிது காலத்துக்கு புறம்பாக்கப்பட்டிருக்க வேண்டும். 67. நகோமி, “கர்த்தருடைய கை ஏன் எனக்கும் என் மருமக் களுக்கும் விரோதமாயிருக்கிறது? தேவன் என்னை புறம்பாக்கி விட்டார். நான் புறம்பாக்கப்பட்டவள். நான் புறம்பாக்கப்படு வதற்கு என்ன செய்தேன் என்று தெரியவில்லை'' என்று வியந்தாள். 68. பாருங்கள், தேவன் தமது வகுப்பட்ட திட்டத்தை செயல் படுத்திக் கொண்டிருந்தார். “தேவனிடத்தில் அன்பு கூருகிற வர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது'' அது என்ன வாயிருந்தாலும் சரி. 69. நகோமி மருமக்களிடம், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிப் போய் அங்கு இளைப்பாறுங்கள். உங்கள் கணவன்மார்கள் இறந்துவிட்டார்கள். நீங்கள் இன்னும் அழகுள்ள இளம் பெண்களாக இருக்கிறீர்கள். திரும்பிப் போங்கள்! நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அவ்விடத்துக்கே திரும்பிச் சென்று இளைப்பாறுதலைக் கண்டடையுங்கள். கர்த்தர் உங்களுக்குத் தயை செய்வாராக. ஏனெனில் நீங்கள் மரித்துப் போனவர்களுக்கு தயை செய்தீர்கள். உங்கள் கணவன்மார் இறந்த பிறகும் நீங்கள் உத்தமமான வாழ்க்கை வாழ்ந்தீர்கள். கணவனில்லாத விதவை யாகிய எனக்கும் நீங்கள் தயை பாராட்டி என்னுடன் கூட இருந்தீர்கள். திரும்பிப் போங்கள்! தேவன் உங்கள் வீட்டில் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவாராக'' என்றாள். அவர்கள் அழுதார்கள். 70. நகோமி, “நான் வயது சென்றவள். எனக்கு குழந்தைகள் பிறக்காது. அப்படி நான் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு பிள்ளை களைப் பெற்றாலும் அதனால் என்ன பயன்? அவர்கள் பெரிய வர்களாகும் மட்டும் நீங்கள் பொறுத்திருக்க முடியாது'' என்றாள். அது அந்த காலத்திலிருந்த சட்டம். அதாவது ஒருவன் மரித்தால், விவாகமாகாமலிருக்கும் அவனுடைய சகோதரன், மரித்துப் போன அவனுடைய சகோதரனின் மனைவியை மணந்து அவனு டைய பெயரை நிலை நாட்ட வேண்டும். “பிள்ளைகள் பெரிய வர்களாகும் மட்டும் உங்களால் பொறுத்திருக்கக் கூடாது. ஆகவே நீங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிப் போய் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே சுகமாய் வாழ்ந்திருங்கள்'' என்றாள். 71. ஓர்பாள், ஒரு காலத்தில் தொடங்கின வெதுவெதுப்பான சபைக்கு: வழி நெடுக செல்லாத சபைக்கு அடையாளமாயிருக் கிறாள். அவள், “இது நல்லதாக படுகிறது” என்று சொல்லி, தன் மாமியாரை முத்தமிட்டு, திரும்பிப் போய் விட்டாள். அவள்வெதுவெதுப்பான விசுவாசிக்கு - இயேசுவைக் கிறிஸ்துவென்று விசுவாசித்து, அதன் பிறகு அவள் எதிலிருந்து வெளி வந்தாளோ அதற்கே திரும்பிச் செல்லும் ஒருத்திக்கு நிழலாயிருக்கிறாள்; நிந்தைப்படும் சில தேவனுடைய பிள்ளைகளுடன் தன் வழியைத்தெரிந்துக் கொண்டு அதன் பிறகு திரும்பிச் செல்லும் ஒரு மனிதனுக்கு; வேதம் கூறுவது போல், “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும் பினதற்கு'' அடையாளமாயிருக்கிறாள்.  72. இப்பொழுது, அவள் தன் தேவர்களிடம் திரும்பினாள். நாமும் அநேக சமயங்களில் நமக்கு தொடக்கத்திலிருந்த தேவர்களிடத்திற்கு திரும்பி விடுகிறோம். ஒருக்கால் தவறான காரியங்கள் மேல் நமது கண்கள் இச்சித்திருக்கக் கூடும். நாம் மறுபடியும் இச்சிப்பதற்கு திரும்பி விடுகிறோம். ஒருக்கால் நமக்கு குடிப்பழக்கம், என்னும் விக்கிரகங்களும், புகைபிடித்தல் என்னும் விக்கிரகங்களும், பொய் பேசுதல் என்னும் விக்கிரகங்களும், திருடுதல் என்னும் விக்கிரகங்களும், என்னும் எல்லாவிதமான விக்கிரகங்களும், இருந்திருக்கலாம். அதன்பிறகு நாம் கிறிஸ்துவை அறிக்கையிட்டு, ஞானஸ்நானம் பெற்று, மறுபடியும் அவை களுக்கே திரும்பி விடுகிறோம். எவ்வளவு விசனமான செயல்! ஓர்பாளின் பெயர் மறுபடியும் வேதத்தில் கூறப்படவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவளுடைய தீர்மானத்தின் நிமித்தம் அவள் புறம்பாக்கப்பட்டாள்.  73. வெதுவெதுப்பான சபை - வெதுவெதுப்பான விசுவாசி. ஒவ்வொரு விசுவாசியும் சபையின் பிரதிநிதியாக இருக்கிறான். ஒவ்வொரு அமெரிக்கனும் அமெரிக்காவின் பிரதிநிதியாக இருக்கிறான். ஒவ்வொரு ஜெர்மானியனும் ஜெர்மனியின் பிரதி நிதியாக இருக்கிறான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருக்கிறான்.  74. இதை கேளுங்கள்! அவள் வெளிவந்த காரியங்களுக்கே மறுபடியும் திரும்பிச் சென்றாள். மனிதர்கள், சில சமயங்களில் போதகர்களும் கூட, கர்த்தருடைய வழியைப் பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்களிடம் நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து பேசினால், அவர்கள் “மூடத்தனம்'' என்று சொல்லி விட்டு அதிலிருந்து திரும்பிச் சென்று விடுகின்றனர். அதுதான் ஓர்பாள். 75. அவர்களிடம் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எடுத்துக் கூறி, ''நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே வேறொரு நாமம் கட்டளை யிடப்படவுமில்லை'' என்றும் “வார்த்தையினாலாவது கிரியை யினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்ய வேண்டும்'' என்றும் சொல்லிப் பாருங்கள். நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் இல்லையென்றால்... பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, “நீங்கள் இரட்சிக்கப்பட விரும்பினால், மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றான். அப்படித்தான் பாவங்கள் போக்கப்படு கின்றன. ஆகவே ஒரு மனிதன், ஏனெனில் புகழின் காரணமாக, அதன்மேல் அவன் வேதாகமத்தை கொண்டிருக்க முடியாது. ஆனால் புகழின் காரணமாக, சபையை முத்தமிட்டு, செய்தியை முத்தமிட்டு, கிறிஸ்துவை முத்தமிட்டு “சென்று வருகிறேன், குட்-பை'' என்று அவன் எதிலிருந்து கக்கித்தள்ளப்பட்டானோ அதற்கே அவன் சென்று விடுகிறான். ஓர்பாள், வெதுவெதுப் பானவன், புறம்பாக்கப்பட்டவன்.  76. ஆனால், ஓ, அந்த ரூத்தின் மேல் எனக்கு எவ்வளவு பிரியம்! அவள் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியிருந்தது. நானும் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியவனாயிருந்தேன், நீங்களும் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள. நீங்கள் ஏதாகிலும் ஒரு தீர்மானம் செய்யாமல், இன்று காலை இந்த கதவு களின் வழியே நடந்து செல்லக்கூடாது. நீங்கள் இந்த அறையை விட்டு வெளியேறும் போது... முன்னைக் காட்டிலும் நல்ல மனிதனாகவோ ஸ்திரீயாகவோ, அல்லது மோசமான மனிதனா கவோ ஸ்திரீயாகவோ வெளியேற வேண்டும். இதை புறக்கணித் தால், நீங்கள் மோசமாகி விடுவீர்கள். அடுத்த முறை அதை அடைவது அதிகக் கடினமாகி விடும். இல்லையேல் நீங்கள் முன் னைக் காட்டிலும் நல்லவர்களாய் இவ்விடம் விட்டுச் செல்வீர்கள்.  77. ரூத்தின் வாழ்க்கையில் ஒரு பலப்பரீட்சை உண்டானது. ஒவ் வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு பலப் பரீட்சை உண்டா கிறது. ரூத் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியவளானாள். அப்படித் தான் வேதம் கூறுகிறது. அவளுடைய மாமியார், “உன் சகோதரி யைப் போல் நீயும் உன் தேவர்களிடம் திரும்பிப் போ. அந்த வெது வெதுப்பானவள் செய்தது போல நீயும் செய். நீ ஏன் திரும்பிப் போகக் கூடாது?” என்றாள்.  78. சுவிசேஷ பிரசங்கி, “உனக்கு விருப்பமானால், அந்த வழி யிலேயே செல்'' என்கிறார். ஆனால் உண்மையைப் பிரசங்கிக்கும் போதகர் ஜனங்களின் முன்னிலையில், “நீங்கள் தீர்மானம் செய்தே ஆகவேண்டும். எழுந்து நில்லுங்கள்'' என்பார். ஆனால் வெது வெதுப்பான, வழவழ கொழ கொழ பிரசங்கி அப்படி சொல்ல மாட்டார். ஆனால் தேவனுடைய உண்மையான ஊழியக்காரர் எவரும் ஆணித்தரமாக, “தீர்மானம் செய்யுங்கள்'' என்பார்.  79. ரூத், “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். உம் முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்கு வேன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படு வேன்'' என்றாள். அதுவே உண்மையான தீர்மானம்.  80. “கர்த்தாவே, உம்மை என் இரட்சகராக ஏற்றுக் கொள் கிறேன். வேதம், “நீ மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸம்நானம் பெற்றுக்கொள்' என்று சொன்னால் நான் அப்படியே செய்வேன். வேதம் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுரைத்தால், நான் அப்படியே செய்வேன். வேதம் என்னிடம், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார்'' என்றுரைத்தால், அதை நான் விசுவாசிப்பேன். யார் என்ன கூறின போதிலும் தேவனையும் அவர் வேதாகமத்தில் எழுதி வைத்துள்ளதையும் அப்படியே ஏற்றுக்கொள்வேன்.'' அதுதான் உண்மையான ரூத். 81. அவள் தன் தீர்மானத்தைச் செய்தாள். அவள் திரும்பிப் போக வேண்டும். இல்லையென்றால் முன் செல்ல வேண்டும். இன்று காலை நாமும் அதே நிலையில் இருக்கிறோம். திரும்பிப் போக வேண்டும், அல்லது முன் செல்ல வேண்டும். திரும்பிப் போக வேண்டாம். நாம் முன் செல்லுவோம்.  82. அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள், அந்நிய மக்களின் தேசத்துக்குள் சென்றனர். ரூத் விசுவாசிக்கு இங்கு அடையாளமாயிருக்கிறாள். விசுவாசி என்பது யார்? விசுவாசியாகிய அவன் அல்லது அவள் உலகை விட்டு வெளி வந்து, கிறிஸ்தவ விசுவாசிகளின் மத்தியிலே வருகிறான். முன்பு புகை பிடித்து, குடித்து, சங்கத்தில் சீட்டு விளையாடிக் கொண்டு, “சிறகுகளை தூக்கியுள்ள பறவை'' போல விதவித மானவைகளை அணிந்து கொண்டிருந்த பெண்கள் இப்பொழுது மாறிப் போய் தேவனுடன் செல்ல வேண்டுமென்று தீர்மானம் செய்கின்றனர். அப்படிப்பட்டவள் அலங்காரத்தில் நம்பிக்கை யில்லாத கிறிஸ்தவ பெண்மணிகளின் மத்தியில் வரும்போது, அவளுக்கு வினோதமாயுள்ளது. அவள் அந்நிய பெண்ணைப் போல் நடக்க வேண்டியுள்ளது. அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் அவளுக்கு நூதனமாய் காணப்படுகிறது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ரூத்தும் அந்நிலையில் தான் இருந்தாள். இரட்சிக்கப்பட்ட போது நீங்களும் நானும் அந்நிலையில் தான் இருந்தோம். 83. நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோது, என் வீட்டை விட்டு துரத்தப்பட்டேன். என் நண்பர்களும், பெண் சிநேகிதி களும், எல்லோருமே என்னைப் புறக்கணித்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்று தேவன் பேரில் விசுவாசங்கொண்டு அவரை சேவித்த வயது சென்ற கூட்டத்தினருடன் நான் சேர்ந்து கொண் டேன். அந்த சபையிலிருந்த பெண்கள் நான் முன்பு சென்று கொண்டிருந்த பெண்களைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தனர். அவர்கள் வித்தியாசமாக நடந்து கொண்டனர். அவர்களைப் பார்த்த போது எனக்கு பயமுண்டாயிற்று. அவர்கள் வித்தியாசமான மக்கள். 84. ரூத் அதைத் தான் செய்ய வேண்டியிருந்தது. அவள் தனக்கு சொந்தமானவர்களை விட்டு மற்றொரு ஜனங்களிடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அவள் இரட்சிக்கப்பட்டாள். அவள் தீர் மானம் செய்தாள். நீங்களும் தீர்மானம் செய்யும்போது, இரண்டில் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது, நீங்கள் உலகத்தின் காரியங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா? அல்லது தேவனோடுகூட செல்ல விரும்புகிறீர்களா?  85. நீங்கள் உலகத்தைப் போலவும் மற்றவர்களைப் போலவும் நடந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கிறிஸ்துவை முத்தமிட்டு “குட்-பை'' விடை பெற்று திரும்பிச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலரின் வழியில் செல்ல விரும்பினால், தேவனின் மாறாத கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். உலகத்திலுள்ள மற்றவர் என்ன கூறின போதிலும், நீங்கள் அங்கேயே நிலைத்திருந்து, “தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அது உண்மையென்று விசுவாசிக்கிறேன். என் வாழ்க்கையில் அதை என்னால் வெளிப்படுத்த முடியாமல் போனாலும், தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அதை நான் விசுவாசிக்கிறேன். அதில் நான் நிலைத்திருக்கிறேன்'' என்று கூறுங்கள். 86. அப்படித்தான் ரூத் நகோமியிடம் கூறினாள்: “நான் உம்மை விடமாட்டேன். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவர்கள் நடந்து கொள்வது போல் நானும் நடந்து கொள்வேன். அவர்கள் செய்வது போல் நானும் செய்வேன். அவர்கள் உண்பதை நானும் உண்பேன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடை வேன். நீர் அடக்கம் பண்ணப்படும் இடத்தில் நானும் அடக்கம் பண்ணப்படுவேன். நான் எங்காவது தவறினால் கர்த்தர் அதற்கு அதிகமாக எனக்குச் செய்யக்கடவர்.'' அதுதான் உண்மையான, மிகத் தெளிவான தீர்மானம். தேவன் தமது சபையிடமிருந்து மிகத் தெளிவான தீர்மானத்தை விரும்புகிறார்.  87. ''நல்லது, கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதித்து, இதை எனக்குச் செய்வீரானால், நான் இன்னின்னதை செய்வேன்''. அது தீர்மானம் அல்ல.  88. “தேவனே, நீர் எனக்கு என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் எப்படியும் செல்வேன். நான் மரிக்க நேரிட்டாலும் பரவா யில்லை. பிழைத்தாலும், மரித்தாலும் என்ன நேரிட்டாலும், அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தாலும், என்னை கேலி செய்தாலும் பரவாயில்லை. நான் எப்படியும் செல்வேன்.'' அதுவே மிகத் தெளிவான தீர்மானம் - ரெபேக்காள் ஈசாக்கைக் காணும் முன்பே செய்த தீர்மானம் போல்.  89. ரெபேக்காளின் பெற்றோர், “பெண்ணை அழைத்து அவள் வாய்ப் பிறப்பைக் கேட்போம், அவள் வயது வந்தவள். அவளே பதில் கூறட்டும்'' என்றார்கள். 90. அவள், “நான் போகிறேன்'' என்றாள். விரைவில் செய்யப்பட்ட மிகத்தெளிவான தீர்மானம். அவள் அதில் நிலைத்திருந்தாள். ரூத்தும் அப்படியே செய்தாள். ஓர்பாள் திரும்பிப் போனாள்.  91. அவர்கள் பிரயாணப்பட்டுச் சென்றனர். ரூத் எங்கே செல்கிறாள் என்று தன் இருதயத்தில் அறிந்திருக்கவில்லை. அவள் சபைக்கு அடையாளமாயிருக்கிறாள். நாம் ஆபிரகாமைப் போல் தேசாந்திரிகளாய் திரிகிறோம். அந்நிய நாட்டில் அந்நிய ஜனங் களிடையே அந்நியராய் இருத்தல். ஆகவே அவள் அப்படியே பிரயாணம் செய்து முடிவில் நகோமி அவளைக் கொண்டு வந்த அந்த அறைக்குள் சென்றாள். அவள் என்ன கண்டாள்? எல்லோரும் அவள் முதுகில் தட்டி, “ரூத், இங்கு நீ வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி'' என்று கூறினர். அவள் சச்சரவைக் கண்டாள். அவள் பொல்லாப்பைக் கண்டாள். அவள் தொல்லையைக் கண்டாள். 92. “கிறிஸ்தவ வாழ்க்கை மலர் படுக்கையைப் போல் மென் மையானது'' என்று உங்களிடம் கூறும் போதகர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர், அல்லது அவர்களே அந்த அனுபவத்தைப் பெறாமல் இருக்கின்றனர். உலகம் உங்களைப் பகைக்கும். ஜனங்கள் உங்களைப் பகைப்பார்கள். நீங்கள் நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலருடன் உங்கள் வழியைத் தெரிந்துக் கொண்டு, இகழப்பட்டு பரியாசம் செய்யப்பட வேண்டும். நீங்கள் வித்தியாச முள்ளவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் வேறொரு நாட் டிலிருந்து பிறந்தவர்கள். 93. என் மனைவி... நான் இதை... நாம் வாழுகின்ற... இதை நாம் மறுபடியும் கூறலாம், அப்படி செய்வது நல்லது... என்னிடம், ''மற்ற பெண்களைப் போல் கிறிஸ்தவ பெண்கள் உடை உடுக்காததன் காரணம் என்ன? நாம் எல்லோருமே அமெரிக்கர்கள் அல்லவா?'' என்று கேட்டாள். 94. நான், “இல்லை, ஐயா” என்றேன்.  95. “அப்படியானால் நாம் யார்?'' என்றாள்.  96. நான், “நாம் அமெரிக்கர்கள், ஜெர்மனியர், பிரெஞ்சுகாரர், பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, ஆப்பிரிக்கா நாடுகளில் எதையும் சேர்ந்தவர்கள் அல்ல'' என்றேன். 97. 'அப்படியானால் நாம் யார்?'' 98. நான், “நாம் கிறிஸ்தவர்கள். அமெரிக்கர்கள் அமெரிக்கர் களைப் போலவும், ஜெர்மானியர் ஜெர்மானியரைப் போலவும் நடந்து கொள்கின்றனர். ஏனெனில் அது அவர்களுடைய தேசிய ஆவி. நமக்கும் ஒரு தேசிய ஆவி உண்டு. அதுதான் தேவனிடமிருந்து பரலோகத்திலிருந்து வந்த பரிசுத்த ஆவி. அதன்படி நாம் நடந்து கொள்கிறோம். அவர்கள் பரலோகத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதன்படி அது நம்மையும் நடந்து கொள்ளச் செய்கிறது. ஏனெனில் நாம் வேறொரு உலகத்துக்குரியவர்கள்'' என்றேன்.  99. நாம் அமெரிக்காவில் வாழ்கிறோம் என்பது உண்மையே. அது நம்முடைய உடல் பாகம். ஆனால் நம்மை நடத்தும் ஆத்துமா, நமது குணாதிசயம், பரத்திலிருந்துண்டானது. நாம் பரத்திலிருந்து பிறந்தவர்கள் என்பதால், நாம் பரத்தின் வாழ்க்கை வாழ்கிறோம். கிறிஸ்தவர் அனைவருமே பரத்திலிருந்து தோன்றியவர்களே. இயேசு, “நான் தாழ்விலிருந்துண்டானவன் அல்ல, நான் உயர்விலிருந்துண்டானவன். நான் இந்த உலகத்திலிருந்துண்டான வனல்ல. என் ராஜ்யம் இவ்வுலகத்திக்குரியதானால் என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல” என்றார். பரலோக ராஜ்யத்தில் பிறந்த ஒவ்வொருவனும் அப்படியே இருக்கிறான். அவன் உயர் விலிருந்து உண்டானவன். 100. இப்பொழுது, நாம் தொடர்ந்து செல்லும்போது, இதை கவனிப்போம். அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது, நீங்களும் அந்நிலையை தான் அடைகிறீர்களா? நிச்சயமாக. எனக்கு அப்படித்தான் நேர்ந்தது. கேலி செய்து... மற்றும் எல்லாம்.  101. பிறகு கவனியுங்கள், ரூத்துக்கு வாழ்க்கை கடினமா யிருந்தது. நீங்கள் கிறிஸ்தவரான பிறகு, உங்களுக்கும் வாழ்க்கை கடினமாயிருக்கும். ஏனெனில் உலக உல்லாசங்களும் இன்பங் களும் அனுபவித்த வாழ்க்கையிலிருந்து தேவனுக்கு பிரதிஷ்டை செய்யும் வேறொரு வாழ்க்கைக்கு உங்களை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். இந்த பக்கத்துக்கு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். 102. உண்பதற்கு நிறைய இருந்து எல்லோரும் மதிக்கும் ஒரு தேசத்திலிருந்து ரூத், அவளைப் பார்த்து சிரித்து கேலி செய்யும், தன் உணவிற்கென வயல் வெளியில் அரிக்கட்டுகளில் சிந்தினதைப் பொறுக்க வேண்டிய ஒரு தேசத்துக்கு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவள் பொறுக்கினதை தலையைக் கட்டும் துணியில் (Scarf) போட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து, அதைத் தட்டி அடித்து, அவளும் அவளுடைய மாமியாரும் உண்பதற்கென ரொட்டி உண்டாக்கினாள்.  103. அவள் வயல்வெளியில் பொறுக்கிக் கொண்டிருந்தபோது, அல்லது பொறுக்கப் போகின்ற வேளையில் அவர்கள் கண்டு பிடித்தார்கள்... அவள் தீர்மானம் செய்தாள். அது அவள் செய்த தீர்மானம். 104. அடுத்தபடியாக அவள் செய்ய வேண்டியது சேவை செய்தல்.  105. சபையும் அதைத் தான் செய்ய வேண்டும். உங்கள் தீர் மானத்தை நீங்கள் செய்தபிறகு, நீங்கள் சேவை செய்ய வேண்டும். தேவனுடைய வரை படத்துக்கேற்ப அவருக்கு சேவை செய்யுங்கள், அவருடைய திட்டப்படத்திற்கு ஏற்றவாறே சேவை செய்யுங்கள். நீங்கள் தேவனுக்கு சேவை செய்தாக வேண்டும்.  106. ரூத் தீர்மானம் செய்கிறாள். அவளுடைய தீர்மானத்துக் கேற்றபடி ரூத் சேவை செய்கிறாள். ஒரு நிமிடம் கவனியுங்கள். சிந்தின தானியத்தைப் பொறுக்குவதற்கென அவள் வயல் வெளிக்குச்செல்கிறாள். 107. அவளுடைய தாய் அவளிடம் கூறுகிறாள் - அது பழைய ஏற்பாடு புது ஏற்பாட்டிடம் கூறுதல். அவளுடைய தாய் அவளிடம், “நமக்கு ஒரு இனத்தான் இருக்கிறான். அவனுடைய பெயர் போவாஸ். அவன் மிகுந்த ஆஸ்திக்காரன். அவன் நெருங்கின உறவின் முறையான். அவனுடைய வயல்வெளிக் குப் போ. ஒருக்கால்... வேறெந்த வயல்வெளிக்கும் போகாதே. அவனுடைய வயல்வெளிக்கு மாத்திரம் போ'' என்றாள்.  108. அவ்வாறே பரிசுத்த ஆவியும் நம்மிடம், நாம் ஒரு சபை புத்தகத்துக்கோ, ஏதோ ஒருவிதமான சபை கோட்பாட்டுக்கோ விலகிச் சென்று விடக்கூடாதென்றும், தேவனுடைய வயல்வெளிக்கு, பழைய ஏற்பாட்டிற்கு, வேதாகமத்திற்குச் செல்ல வேண்டுமென்றும் எச்சரிக்கிறார். “நாங்கள் இதைக் கூறுவோம். ஜெபத்திற்காக இதை உச்சரிப்போம்'' என்று கூற வேண்டாம். வயல்வெளியில் மாத்திரம் தங்கியிருங்கள். சரியாக அதற்குள் செல்லுங்கள். ஏனெனில் அவர் நம்முடைய நெருங்கிய உறவின் முறையாகிய இனத்தான். 109. தேவனுடைய வார்த்தை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட் டுக்கு நெருங்கிய உறவின் முறையாக உள்ளது. பழைய சபை புது சபைக்கு, கிறிஸ்தவனுக்கு, விசுவாசிக்கு தாயாக உள்ளது (பாருங்கள்?) “வேறு வயல் வெளிக்குச் செல்ல வேண்டாம். இந்த வயல்வெளியிலேயே தங்கியிரு. என்றாவது ஒரு நாள் ஒருவேளை அவருடைய கண்களில் தயை கிடைக்கும்.''  110. ஒரு நாள் ரூத் வயல்வெளியில் பொறுக்கிக் கொண்டிருந்த போது, போவாஸ் என்னும் பெயர் கொண்ட இந்த ஐசுவரிய வான், தலைவன், மிகுந்த ஆஸ்திக்காரன் அங்கு வந்து அவளைக் கண்டான். ஓ, அவன் அவளைக் கண்டபோது அவள் மேல் அன்பு கொண்டான். அவள் மிகவும் அருமையானவள் என்று அவன் எண்ணினான். அவளுடைய நற்பண்பு அவனுக்குப் பிடித்துவிட் டது. அவன், “நீ குணசாலி என்று நானும் அறிவேன், ஜனங் களும் அறிவார்கள்'' என்று கூறினது ஞாபகமிருக்கும். அவள் மிகத் தெளிவான தீர்மானம் செய்து, அவள் கூறினபடியே அவள் அறியாத ஜனங்களின் மத்தியில் வந்து வாழ்ந்தாள்.  111. இன்றைக்கு அவர்கள், “நீர் ஒரு கிறிஸ்தவன் என்றும் தேவனுடைய மனிதன் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால், இப்ப டிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'' என்று கூறுவது போல். 112. அப்படித்தான் நிக்கொதேமு இயேசுவிடம் கூறினான். அவன், “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'' என்று, அவர் உட்கார்ந்து கொண்டு ஜனங்களின் இருதயங்களி லிருந்த சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறினதைக் கண்டபோது கூறினான். 113. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவர் திரும்பிப் பார்த்து, “என்னை தொட்டது யார்?'' என்று கேட்டார். எல்லோரும் மறுத்தனர். அவர் கூட்டத்திலுள்ளவர் களை நோக்கி அந்த பெண்ணைக் கண்டுபிடித்து, ''அங்குள்ள பெரும்பாடுள்ள ஸ்திரீயே, உன் விசுவாசம் உன்னை குணமாக் கினது'' என்றார். 114. “ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் இப்படிப் பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான். உம்மை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நாங்கள் சபையை விட்டு துரத்தப்படுவோம்.” பாருங்கள். சகோ. வெஸ்ட், நேற்றிரவு நாம் பேசின ஒட்டு போடப்பட்ட திராட்சை செடி போல. அவர்கள் உங்களைத் துரத்தி விடுவார்கள். “ஆனால் எங்கள் இருதயத்தின் ஆழத்தில் நீர் மூல திராட்சை செடியிலிருந்து வந்தவர் என்று அறிந்திருக்கிறோம்.'' கிறிஸ்து திராட்சைச் செடி, நாம் கொடிகள். “நாங்கள் அறிந்திருக் கிறோம். ஏனெனில் தேவனுக்குள் இருக்கும் அதே ஜீவனை உமக் குள் இருப்பதை நாங்கள் காண்கிறோம்'' 115. அதைத் தான் போவாஸ் ரூத்தில் கண்டான். அந்த மிகத் தெளிவான தீர்மானம், ஸ்திரீயினுடைய நற்பண்பின் உருவகம் அங்கே நின்று கொண்டிருந்தது. ஆகவே அவன் அவள் மீது அன்பு கொண்டான். 116. இப்பொழுது, நீங்கள் இதை கவனிக்க விரும்புகிறேன். பழைய சபையாகிய நகோமி ரூத்துக்கு தன் மார்க்கத்தின் எல்லா பிரமாணங்களையும் விளக்கிக் காண்பிக்கிறாள் - பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாயுள்ளது போல். இந்தக் கதையை (story) நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.  117. இப்பொழுது, நான் நிழல்களைக் காண்பிக்க விரும்புகிறேன். நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படித்தால், அது உங்களுக்கு புதிய ஏற்பாட்டை விளக்கிக் காண்பிக்கிறது. ஏனெனில் அது புதிய ஏற்பாட்டின் நிழலாக அமைந்துள்ளது. இப்பொழுது, நான் சுவற்றை நோக்கிச் செல்லும் போது, என்னை நான் முன்பு கண்டிராமல் இருந்து, என் நிழலைக் காணும்போது, நான் எப்படி காணப்படுவேன் என்பதைக் குறித்து ஒருவிதமான எண்ணத்தை, கருத்தைப் பெறுவேன்... நீங்கள் புதிய ஏற்பாடு என்னவென்று அறிய விரும்பினால், பழைய ஏற்பாட்டைப் படியுங்கள். அப் பொழுது அதன் நிழலை அதில் காண்பீர்கள். பாருங்கள்? பிறகு புதிய ஏற்பாட்டை நீங்கள் படிக்கத் துவங்கும்போது, “இது தான் இது என்பது நிச்சயம்'' என்பீர்கள். எபிரெயர் நிரூபத்தில் பவுல் பழைய ஏற்பாட்டிலுள்ளவைகளை விளக்குவது போன்று. 118. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ரூத் சொன்னாள் அல்லது .... நகோமி ரூத்திடம், “இப்பொழுது அவன் நமக்கு நெருங்கிய உறவின் முறையானும் சுதந்திரவாளியுமாயிருக் கிறான். உனக்கு அவனிடம் கிருபை கிடைத்தால், உனக்கு இளைப் பாறுதல் கிடைக்கும்'' என்றாள். ஓ, என்னே! “உனக்கு கிருபை கிடைத்தால் இளைப்பாறுதல் கிடைக்கும்.'' போவாஸ் என்னும் ஆஸ்திக்காரன், சகலத்துக்கும் சுதந்தரவாளி, அறுப்புக்கு எஜமான், கிறிஸ்துவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறான். ஓ, என்னே! போவாஸ் குதிரை பூட்டிய வண்டியில் சவாரி செய்து வந்து, வயல் வெளியை நோக்கியபோது, அவனுடைய கண்கள் ரூத்தின் மேல் விழுந்தது! அவன் எஜமான். அவன் அறுப்புக்கு எஜமான். அவளுக்கு அவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது.  119. இன்றைக்கு சபைக்கும் அதுதான் நடக்கிறது. அறுப்புக்கு எஜமான் போய்க் கொண்டிருக்கும் வேளையில், அவர் பெரிய கட்டிடங்கள், உயர்ந்த கூர் கோபுரங்கள், நன்கு பயிற்சி பெற்ற பாடற்குழுக்கள் போன்றவைகளை காண்பதற்காக செல்வதில்லை. அவர் தனிப்பட்ட நபர்களை - தங்களைப் பிரதிஷ்டை செய்து கிறிஸ்துவுக்கென, மிகத் தெளிவான தீர்மானம் செய்துள்ள ஆண் களையும் பெண்களையும் - எதிர்நோக்கிச் செல்கிறார், அவருடைய ஊழியத்திற்கென்று தங்களை பிரதிஷ்டை செய்து, “தேவனே, அதை விசுவாசிக்கிறேன், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிக்கிறேன். உம்முடைய வார்த்தை எதையாகிலும் ஒன்றை கூறினால், அதில் நிலைத்திருப்பேன். ஏனெனில் அது உம்முடைய வார்த்தை. அதை நான் விசுவாசிக்கிறேன். அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுபவர்களை, அறுப் புக்கு எஜமான் அப்படிப்பட்டவர்களைத்தான் எதிர்நோக்குகிறார். பசி தாகமுற்றவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்க அவர் விரும்புகிறார். “பசிதாகமுள்ளவர்களாகிய நீங்கள் பாக்கிய வான்கள், நீங்கள் திருப்தியடைவீர்கள்'' இன்றைக்கும் அவர் அப்படிப்பட்ட சபையைக் கண்டுபிடிக்க முயல்கிறார். 120. இப்பொழுது அதன் பிறகு ரூத் அவமானமான ஒரு செயலை செய்யும்படி கூறப்படுகிறாள். அதற்கு அவள் தலையசைத்தாள். ஏனெனில் அவள் தன் தீர்மானத்தை செய்துவிட்டாள். விசு வாசிக்கு என்ன ஒரு அடையாளம், என்ன ஒரு பரிபூரணமான அடையாளம். 121. பழைய ஏற்பாட்டின் சபையாகிய நகோமி, “இன்று இராத்திரி போ, இது வாற்கோதுமை காலம்” என்றாள். என்ன ஒரு அழகிய கருத்து. இதில் நாம் அதிக நேரம் நிலைத்திருக்கக் கூடும். 122. நகோமியும் ரூத்தும் சரியாக வாற்கோதுமை அறுப்பின் காலத்தில் வந்தனர். வாற்கோதுமை காலம் என்பது அப்பத்தின் காலம். அது புதிய அப்பம் அளிக்கப்படும் காலம். சபையானது 2000 ஆண்டு காலம் அஞ்ஞான போதகங்களின் வழியாக வந்து, இந்த கடைசி நாட்களில் வாற்கோதுமை காலத்தை - புது ஜீவன், புது அப்பம், பரலோகத்திலிருந்து வரும் தேனின் காலத்தை அடைந்துள்ளது. (ரஸ்ஸல், நாம் தேன் கூட்டின் ரொட்டியைப் பற்றி பேசுகிறோம்!) அதுதான் அது. வானத்திலிருந்து இறங்கின அப்பம். “நானே ஜீவ அப்பம். உங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். நானே தேவனிடமிருந்து வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்.'' இந்தக் கடைசி நாட்களில் சபையானது வாற்கோதுமை காலத்திற்கு கொண்டு வரப்பட் டுள்ளது.  123. ரூத், ஒரு புறஜாதி, தள்ளப்பட்டவள், விரட்டப்பட்டவள். இப்பொழுது... மணவாட்டியாக ஏற்றுக் கொள்ளப்பட கொண்டு வரப்படுகிறாள். கிறிஸ்து சரியாக வாற்கோதுமை காலத்தின் போது வருகிறார்.  124. அவள் கூறினார், “உன் வஸ்திரங்களை உடுத்திக் கொள்'' என்றாள். (“உன் வஸ்திரங்களை களைந்துவிடு'' ) என்றல்ல. இன்றைய காலத்தின் போக்குக்கு அது எவ்வளவு முரணாயுள்ளது! ''அவனைச் சந்திக்கச் செல்லும்போது, உன் வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு போ. அவன் இன்று இராத்திரி களத்திலே வாற் கோதுமை தூற்றுவான். உன் வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு களத்துக்கு போ. அவனைச் சந்திக்கும்போது உன்னை மூடிக்கொள்.''  125. இன்றைக்கோ அவர்கள் தங்களை மூடாமலிருக்க விரும்பு கின்றனர். “உன்னை மூடிக்கொண்டு களத்துக்குப் போ. அவன் அங்கு வாற்கோதுமை தூற்றுவான். அவன் படுத்திருக்கும் இடத்தை பார்த்துக்கொள்.” அதை நீ செய்தாயா? கொல்கதாவில்! அவர் என்னை ஏற்றுக்கொள்வதற்காக, அநேக ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தமது ஜீவனைக் கொடுத்த இடத்தை என் இருதயத்தில் பதித்துக் கொண்டேன். அவர் படுத்துக் கொண்டிருக்கும் இடத்தைப் பார்த்துக்கொள். அவர் எங்கே அடக்கம் பண்ணப்பட்டார் என்பதைக் கவனி. அதைத்தான் ஒவ் வொரு விசுவாசியும் செய்ய வேண்டும். அவர் உனக்காக என்ன செய்தார் என்பதைக் கவனி. சென்ற ஞாயிறன்று நான் அளித்த கல்வாரிக்கு விஜயம் என்னும் செய்தி அவர் உனக்காக என்ன செய்தார் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார். 126. நகோமி, “அவன் படுத்திருக்கும் இடத்தைப் பார்த்துக் கொள். அவன் தூங்குவதற்காக (இளைப்பாறுவதற்காக) படுக்கும் போது, நீ போய் அவன் காலடியில் படுத்துக்கொள்.'' அவன் தலைமாட்டில் அல்ல, காலடியில் - தகுதியற்ற நிலைமை. “அவன் கால்கள் மூடியிருக்கிற போர்வையை இழுத்து உன்மேல் விரித்துக் கொள்.' (சகோதரர் பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை மூன்று முறை தட்டுகிறார் - ஆசி) ஓ. அதைக் கவனித்தீர்களா? (சபையார் ‘ஆமென்'' என்கின்றனர் - ஆசி), ஓ, என்னே ! நான் ஒரு அதிதீவிர மத வைராக்கியம் கொண்டவன் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் மூட மதாபிமானி என்று அவர்கள் கருதுகின்றனர். அது எனக்கு சரியாகப் பொருந் தும், அந்த தேவனுடைய ஆவி - அவர் கல்வாரியில் கிடந்த இடம், கெத்சமனேயில் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையை பார்த்துக் கொள்ளுங்கள். அவருடைய கால்களை குறி வைத்து அதன் அருகில் ஊர்ந்து சென்று அங்கு படுத்துக்கொண்டு, உங்கள் சுயத்துக்கு மரித்துவிடுங்கள். நீ... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) அதோ நீங்கள் அவருடைய அங்கியினால் உங்களைப் போர்த் துக் கொள்ளுங்கள். அவள் “அங்கி" என்று அதை அழைத்தாள்).  127. ரூத், “நீர் எனக்கு சொன்னபடியெல்லாம் செய்வேன்'' என்றாள். 128. ஓ, ஒரு விசுவாசிக்கு அது எவ்வளவு தெளிவான தீர்மானம்! “வேதாகமம் என்ன சொல்கிறதோ, அதன்படி செய்வேன். அது ''நீங்கள் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்து வின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றுரைக்கிறது. அதன்படி செய்வேன். அது “நீங்கள் உலக மெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்றுரைக் கிறது. அதன்படி செய்வேன். அது “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்றுரைக்கிறது. அது சொன்னபடியெல்லாம் நான் செய்வேன்.'' பாருங்கள்? சபையானது வார்த்தையிடமிருந்து கட்டளை பெறுகிறது. அவள் போய் படுத்துக் கொண்டாள்.  129. ஒரு இளம் விதவை இந்த மனிதனுடைய காலடியில் படுத்துக் கொள்வதென்பது அவமானமான செயல் என்பதை ஞாபகம் கொள்ளவும். வெளிப்புற உலகிற்கு அது அவமானத் துக்குரியது.  130. ஓ, உங்களால் அந்த இகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர் - ஆசி) இதோ அது. கவனியுங்கள்! கவனியுங்கள், இதுதான் அது. இளம் பெண்களும் இளைஞர்களும் வயோதிபர்களும் கொண்ட சபை தன்னை உலகத்தினின்று வேறு பிரித்துக் கொண்டு உலகத்துக்கு இகழ்ச்சியாய் தோன்றும் பரிசுத்த ஆவியின் ராஜ்யத்துக்கு வரவேண்டியதாயுள்ளது. அது என்னவென்று அவர்கள் தங்கள் இருதயத்தில் அறிந்துள்ளனர். ஆனால் உலகின் பார்வைக்கு அவர்கள் மூட மதாபிமானிகளாய் உருளும் பரிசுத்தராய், அல்லது அப்படிப்பட்ட இகழ்ச்சிக்குரிய ஒரு பெயரைக் கொண்டவர்களாய் காணப்படுகின்றனர். ஆனால் சபையானது அதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அந்த இடத்தை நீங்கள் பார்த்துக் கொண்டு அங்கு படுத்துக் கொள்ள சித்தமுயைடையவர் களாயிருக்கிறீர்களா? (“ஆமென்'') உலகம் உங்களை என்ன வேண்டுமானாலும் அழைக்கட்டும்.  131. அந்த பழைய பாடல் இவ்வாறு கூறுகிறது. நான் இயேசுவுடன் தனிமையில் நடக்கத் தொடங்கி விட்டேன். யாக்கோபைப் போல் ஒரு கல்லை தலையணையாக்கிக் கொண்டேன். நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலருடன் வழியில் செல்வேன் நான் இயேசுவுடன் தொடங்கி, இப்பொழுது சென்று கொண்டிருக்கிறேன். 132. அது தான். என்ன நடந்தாலும்... மற்றவர்கள் என்ன செய் தாலும், நான் கிரயத்தைச் செலுத்துவேன். அது இகழ்ச்சியைக் கொண்டு வந்தாலும், என் குடும்பத்தினரை இழக்க நேரிட்டாலும்... என் கூட்டாளிகளை, பெண் சிநேகிதிகளை, நண் பர்களை விடவேண்டும் என்னும் நிலைமை ஏற்பட்டாலும், நான் சென்று கொண்டிருப்பேன். நான் அந்த வழியில் செல்வேன். என் அண்டை வீட்டுக்காரர் என்னை 'உருளும் பரிசுத்தன், பெந்தெ கொஸ்தேகாரன், மூட மதாபிமானி என்று அழைத்தாலும், அதைக் குறித்து நான் கவலை கொள்ள மாட்டேன்.'' அது என்னில் எவ்வித வித்தியாசத்தையும் உண்டாக்காது. நான் தொடங்கி விட்டேன். நான் தெளிவான தீர்மானம் செய்துவிட்டேன், நான் சென்று கொண்டேயிருப்பேன். 133. இப்பொழுது போவாஸ் ஒருவன் மாத்திரமே, அவள் வயலில் பொறுக்கினதால் ஏற்பட்ட களைப்பை தீர்த்து அவளுக்கு இளைப்பாறுதல் அளிக்க முடியும். ஓ, அது மிகவும் இனிமை யானது. போவாஸ்.... அவளை வயல் வெளியில் கண்டபோது.... (இதை நான் காணத் தவற முடியாது). போவாஸ் அவளை வயல் வெளியில் கண்டபோது, 'நீ யார்?'' என்று கேட்டான். அவள், “என் பெயர் ரூத்'' என்றாள். “ஓ, எங்களுடன் தங்க வந்த மோவாபியப் பெண்ணா ?”   ''ஆம்.'' 134. ''உன்னைக் குறித்து நான் கேள்விப்பட்டேன். வேறு வயலில் போகாதே'' ஊம்! அது எனக்கு பிடிக்கும். “மிஷன் - தாவுதலை ஆரம்பிக்காதே. சரியாக என்னுடைய வயலிலேயே தரித்திரு. என்னோடே தங்கியிரு. அவன் அவளை நேசித்தான். இங்கேயே இரு. என்னுடன் இரு. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ஓடிச் செல்லாதே. இங்கேயே தங்கியிரு.'' 135. நீ செய்தியை விசுவாசித்தால், அதை அப்படியே விடாது ஓட்டிக் கொண்டிரு. பாருங்கள்? கிரயம் என்னவானாலும் அதிலே தங்கியிருந்து, தொடர்ந்து செல், “இதை, அதை, அல்லது மற்றதை நான் தியாகம் செய்ய வேண்டுமென்றாலும், நான் குடிப் பழக்கத்தை நிறுத்த வேண்டியதாயிருந்தாலும், நான் திருடுவதை விட்டு விட வேண்டியதாயிருந்தாலும், நான் அதிலே நிலைத்திருப்பேன்.'' பாருங்கள்?  136. அவன் மறுபடியும்... அவன், "இப்பொழுது அவர்கள் உன்னைத் தொல்லைப்படுத்த மாட்டார்கள். உன்னை இழிவாகப் பேசாதபடிக்கு நான் இளைஞருக்கு கட்டளையிட்டிருக்கிறேன்.'' ஆமென். அது எனக்குப் பிரியம் : அவனுடைய பாதுகாப்பு. அதைக் கூறினது யார்? அறுப்புக்கு எஜமான்.  137. ஜாக்கிரதையாயிருங்கள். “நான் அபிஷேகம் பண்ணினவர் களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள்.'' அது சரியா? "இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.'' அது சரியா? அவர்களுக்கு எவ்வித இடறலையும் உண்டாக்க வேண் டாம். “ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்''. ஓ, இந்த உலகத்தைக் கவனியுங்கள். அது துன்புறுத்தும் ஒன்று. அவர்களுடைய நேரம் வந்து கொண்டிருக்கிறது.  138. அவன் இளைஞரிடத்தில், வேலைக்காரரிடத்தில் சென்றான்.... அவன், “இப்பொழுது அவள் தன் ஜீவனத்துக்காக பொறுக்கிக் கொண்டிருக்கிறாள். அறுக்கிறவர்களே, தூதர்களே...'' தூதர்கள் தான் அறுக்கிறவர்கள். அவன் “தூதர்களே, அறுக்கிறவர்களே, எப்பொழுதாவது ஒருமுறை ஒரு கைப்பிடியளவு வேண்டு மென்றே சிந்திவிடுங்கள். அவளை அதிக களைப்பாக்க வேண்டாம். எப்பொழுதாவது ஒரு முறை அவள் ஒரு நல்ல செய்தியைக் கேட்கட்டும். எப்பொழுதாவது ஒரு முறை அருமையான பரிசுத்த ஆவியின் வல்லமை அவளை மூடி, நான் இன்னும் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்தட்டும். அவள் மத்தியில் தெய்வீக சுகமளித்தலை நடப்பித்துக் காண்பியுங்கள். அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பியுங்கள். அப்பொழுது அவள் மத்தி யில் நான் இருக்கிறேன் என்பதை அவள் அறிந்து கொள்வாள்.'' அது தான். 139. அந்த கைப்பிடியளவுகளைக் காண உங்களுக்குப் பிரியம் அல்லவா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி) இன்று காலை நாம் காண்போம் என்று நம்புகிறேன். நீங்களும்தானே? ('ஆமென்'') கை நிறைய புது வாற்கோதுமை. கர்த்தர் முன்பு செய்து வந்ததை இப்பொழுதும் செய்கிறார் - அவர் செய்வார் என்று நாம் அறிந்துள்ளதை. அவர் அறுப்புக்கு எஜமான். அவர் ஒருவர் மாத்திரமே கை நிறைய உள்ளதைச் சிந்த முடியும். “இன்று காலை அக்கூட்டத்திற்குச் செல்ல நான் தூதர்களுக்கு கட்டளையிடுகிறேன். அவர்கள் குறிப்பிட்ட ஒன்றை செய்ய வேண்டுமென்று அவர் களிடம் கூறியுள்ளேன். அவர்களுக்கு நான் கட்டளையிடுகிறேன், அவர்கள் அதைச் செய்வார்கள்.'' ஓ, என்னே.  140. இப்பொழுது அவள் அங்கே படுத்துக் கொண்டு அந்த அவமானச் செயலைப்புரிய வேண்டியதாயிருந்தது. அவளை யார் என்ன வேண்டுமானாலும் அழைத்திருக்கக்கூடும்... ஆனால் அவள் அதைச் செய்ய தீர்மானித்தாள். அவள் அந்த செயலைப் புரிந்ததற்காக வேசி என்று அழைக்கப்பட்டிருக்கக் கூடும், ஆனால் அவள் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் தனக்கு அளிக்கப்பட்ட பிரமாணத்தை அப்படியே பின்பற்றினாள். எனவே அவள் அங்கு சென்று அவன் போர்வையினால் தன்னைப் போர்த்துக் கொள் கிறாள். அவள் எங்கே சென்றாள்? கல்லறைக்கு. அவள் எங்கே சென்றாள்? அவன் இளைப்பாறிக் கொண்டிருந்த இடத்துக்கு.  141. அங்குதான் நான் அதைக் கண்டடைந்தேன். என் இரட்சகர் மரித்த குருசண்டை பாவத்திலிருந்து கழுவப்பட நான் கதறினேன் அங்கு என் இருதயத்தில் இரத்தம் தெளிக்கப்பட்டது அவருடைய நாமத்துக்கே மகிமை இம்மானுவேலின் இரத்தக்குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்றுண்டு அங்கு பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி தங்கள் பாவக் கறையை போக்குகின்றனர். 142. அவரைக் கிடத்தின இடத்தை பார்த்துக் கொண்டு, அங்கு போய் அவருடன் படுத்துக் கொள்ளுங்கள். நான் போன ஞாயிறு கூறினது போன்று இன்று காலை நீங்கள் கல்வாரிக்குச் செல்ல ஆயத்தமா? உங்கள் வாழ்க்கையில், அந்த இடத்தை நீங்கள் குறித்து விட்டீர்களா? இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த இடத்தில் உங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்களா? 143. "ஓ, அதை நாங்கள் பாராட்டுகிறோம்.'' ஆனால் நீங்கள் சிலுவையில் அறையப்படுவதைக் குறித்தென்ன? உருளும் பரிசுத்தர், அதிதீவிர மதவைராக்கியமானவன், போன்ற இகழ்ச்சியான பெயர்களுடன் உங்களை சம்பந்தப்படுத்திக் கொண்டு கிரயம் எதுவானாலும் அந்த வழியில் செல்ல நீங்கள் ஆயத்தமா? 144. அந்த இடத்தை நீங்கள் குறித்துக் கொண்டு, அங்கு சென்று அவருடன் படுத்துக் கொண்டு, “கர்த்தாவே, இதோ அடியேன்'' என்று கூறுவீர்களா? பின்பு என்ன? அவர் மேல் இருந்த அதே போர்வையை இழுத்து உங்கள் மேல் விரித்துக் கொள்ளுங்கள். 145. ஒருமுறை ஒரு ஸ்திரீ நம்முடைய கர்த்தரிடம், “என் இரண்டு குமாரர்களில் ஒருவன் உம்முடைய வலது பாரிசத் திலும், ஒருவன் உம்முடைய இடது பாரிசத்திலும் உட்காரும் படிக்கு அருள் செய்யும்'' என்றாள். 146. அதற்கு அவர், ''நான் குடிக்கும் பாத்திரத்தில் உங்களால் குடிக்க முடியுமா?'' என்றார். அது கசப்பான துன்புறுத்தல்.  ''ஆம்.'' 147. ''நான் பெறும் ஸ்நானத்தை உங்களால் பெறக் கூடுமா?'' படுத்துக்கொண்டு அவர் மேல் உள்ள அதே போர்வையை இழுத்து உங்கள் மேல் விரித்துக் கொள்ளுங்கள்.  148. எலியா மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான். அவன் தன் போர்வையை எலிசாவிடம் எறிந்து, அவன் அதனால் தன்னை விரித்துக் கொண்டு இரட்டிப்பான ஆவி பெற்றுக் கொள்ளும் படி செய்தான். அதே ஆவி, ஆனால் இரட்டிப்பான பங்கு. அதே வல்லமை, வேறொன்றும் இல்லை. அதைக் காட்டிலும் அதிகம் இல்லை. ஆனால் இரட்டிப்பான பங்கு.  149. மோசே களைப்படைந்த போது, அவனுடைய மாமனார் அவனிடம்... “நீ அதிக களைப்புற்றிருக்கிறாய். உன் ஆவியை எடுத்து அதை மற்றவர்கள் மேல் வைக்கும்படி தேவனிடம் வேண்டிக்கொள்'' என்று கூறினது போல்.  150. அப்பொழுது கர்த்தர் அவன் மேலிருந்த ஆவியை எடுத்து, அதை எழுபது பேர்கள் மேல் வைத்தார். அந்த எழுபது பேரும் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு அதிக வல்லமை இல்லை, ஆனால் அதிக ஆட்கள் இருந்தனர், அவ் வளவுதான். அதிக ஆட்கள் அவர்களுக்கு இருந்தனர் என்று மாத்திரமே. 151. அப்படித்தான் இன்றைக்கும் உள்ளது. ஒரு மனிதன் அதை செய்ய முடியாது. தேவன் தம்முடைய ஆட்கள் எல்லாவிடங் களிலும் கிரியை செய்யும்படிக்கு வைத்துள்ளார். ஆனால் அது அதே வல்லமை, அதே பரிசுத்த ஆவி, அதே இயேசு.  152. இப்பொழுது போர்வையை, பரிசுத்த ஆவியை எடுத்துக் கொண்டாள். அவள் தனக்குத் தானே மரித்து, அவன் கிடக்கும் இடத்தை-இளைப்பாறும் இடத்தை- அறிந்து கொண்ட போது...அவள் போய் அங்கு படுத்துக் கொண்டு, அவன் மேலிருந்த போர்வையை இழுத்து தன் மேல். “யார் அது?'' என்றான். அவன் கூறினான்... அவள், “மோவாபியளாகிய, உமது அடியாளாகிய ரூத்-நான்தான்'' 153. அவன் எழுந்து, “நீ குணசாலி என்பதை அறிகிறேன்'' என்றான். ஆமென். ஓ! உங்கள் ஆத்துமாவினூடாக சிறிய அதிர்வுகளை அது அனுப்புகின்றதல்லவா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) “நீ ஒரு குணசாலியான ஸ்திரீ'.  154. அவள் என்ன மறு உத்தரவு அருளினாள்? “நீர் நெருங்கின இனத்தான், சுதந்திரவாளி. '” ஆமென். “நீர் நெருங்கின இனத்தான். நீர் எனக்கு இதைச் செய்ய முடியும். நீர் என்னை இளைப்பாறச் செய்ய முடியும். இங்கு நான் வந்து படுத்துக் கொண்டேன். நான் நடத்தை கெட்ட பெண் என்பதனால் அல்ல, அல்லது மற்ற வர்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்ற காரணத்தால் அல்ல. “எனக்கு அந்நிய பாஷைகள் பேச முடியும். எனக்கு ஆவியில் நடனமாட முடியும். எனக்கு கூச்சலிட முடியும்'' என்று ஜனங் களுக்குக் காண்பிக்க அல்ல. நீர் நெருங்கின சுதந்திரவாளி என்ற காரணத்தால் இங்கு வந்திருக்கிறேன். என்னால் பெரிய காரியத் தைச் செய்ய முடியும் என்று காண்பிக்க அல்ல. நீர் நெருங்கின இனத்தான் என்பதால் இங்கு வந்திருக்கிறேன். நீர் ஒருவர் மாத்திரமே என்னை மீட்க முடியும்.'' 155. இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவை அடைந்த சபையோரின் மனப்பான்மையை கவனித்தீர்களா? பாருங்கள், பாருங்கள்? ''நீர் எனக்கு நெருங்கின இனத்தான்.'' 156. அவன், “நீ குணசாலியான பெண். நான் உன் நெருங்கின இனத்தான். இப்பொழுது உன்னை போர்த்திக் கொண்டு, காலை வரைக்கும் படுத்திரு. அந்த போர்வையை எடுத்து உன் மேல் விரித்தக்கொள். நான் உன் இனத்தான். காலை வரைக்கும் படுத் திருந்து இளைப்பாறு.” ஆமென். ஆமென். “நான் உன் இனத்தான். இளைப்பாறு!”ஆமென்.  157. காலையில், விடியற்காலையில், அவள் அதிகம் வாற்கோது மையை சேர்த்துக் கொண்டு ஆறு படி என்று நீனைக்கிறேன். அவளுடைய போர்வையில் கட்டிக் கொண்டு வீடு திரும்பினாள். ஆகவே - ஆகவே நகோமி, “என் மகளே'' என்றாள்.  158. பிறகு நீ பீடத்திலிருந்து எழுந்து, திரும்பிச் சென்று, “இப்பொழுது என்ன நடக்கப் போகின்றது, அம்மா? இப்பொழுது என்ன சம்பவிக்கப் போகிறது?'' ஆமென். 159. "பொறுத்திரு!” (ஆமென்). “ரூத், பொறுத்திரு. ஏனெனில் மீட்புக்கான முழு கிரயத்தைச் செலுத்தித் தீருமட்டும் அந்த மனிதன் இளைப்பாற மாட்டான்.” ஆமென். ஆமென். நான் நிற் கும் இடத்திலேயே. ஆமென். உங்களை மீட்பதற்கென - உங்க ளுக்குத் திரும்பத் தருவதற்கென? அவர் முழு கிரயத்தையும் செலுத்தித் தீருமட்டும் இளைப்பாற மாட்டார். 160. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், மீட்பின் பிர மாணம்... நாம் ஆராதனையின் முடிவுக்கு வருகிறோம். மீட்பின் பிரமாணம் இதுவே: இழந்து போன ஒரு பொருளை மீட்கும் மனிதன் மிகவும் நெருங்கின இனத்தானாக இருக்க வேண்டும். அடுத்தபடியாக அவன் நேர்மையுள்ள மனிதனாக, நீதியுள்ள மனிதனாக இருக்க வேண்டும். அதன் பிறகு, அதைச் செய்ய அவனிடம் போதிய பணம் இருக்க வேண்டும். அதைச் செய்து முடித்த பிறகு அவன் பகிரங்க அறிக்கை செய்ய வேண்டும். அன்று முதல் அது அவனுடைய பொருளாகி விடுகிறது.  161. எனவே, இப்பொழுது பாருங்கள். போவாஸ் கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறான். இப்பொபது ரூத் சபைக்குவிசுவாசிக்கு - அடையாளமாக இருக்கிறாள். பழைய ஏற்பாட்டின் தேவன், இழந்து போனவர்களை மீட்பதற்கு தேவன் மனிதனுக்கு இனத்தானாக ஆகவேண்டும். ஆகவே மனிதனுடைய இனத்தானாக தேவனுக்கு இருந்த ஒரே வழி, அவர்களில் ஒருவராக ஆவதே யாகும். ஆமென்.  162. தேவத்துவத்தில் மூன்று தனிப்பட்ட ஆட்கள் உள்ளனர் என்ற விஷயத்தில் எனக்கு பில்லி கிரகாமுடனும் மற்ற திரித்துவ போதகர்களுடனும் கருத்து வேற்றுமை உண்டு. நான் திரித் துவத்தில் நம்பிக்கை கொண்டவன் என்பது உண்மையே, ஆனால் அந்த விதமாக அல்ல - அதாவது அவர்கள் மூன்று ஆட்கள் என்று. அவர்கள் ஒருவரே. அதை நிரூபிக்க நமக்கு வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை, இந்தக் கதை ஒன்றே அதை நிரூபிக்கும்.  163. தேவன் மனிதனானார்! அவர் இனத்தானாக வேண்டியிருந் தது. அவர் தேவனாயிருந்து கொண்டு... பாவிகளாகிய நம்முடன், அவருடைய சிருஷ்டிகளுடன்...இனத்தானாக இருக்க முடியாது. ஆதலால், மனிதன் தேவனாக ஆகவேண்டி, தேவன் ஆக, தேவன் மனிதன் ஆனார். ஆமென். 164. நாம் மனிதர், பாவிகள் என்பதால் தேவன் நமது பாவங்களை அவர் மேல் சுமந்து கொண்டு, பாவியானார். அவர் பாவமே அறியாதவர், இருப்பினும் நமது பாவங்கள் அவர் மேல் சுமத்தப்பட்டதனால், அவர் பாவியானார். நாம்... நான் அவராகும் பொருட்டு, அவர் நான் ஆனார். பாருங்கள்? நான் தேவனுடைய குமாரனாகும் பொருட்டு, அவர் பாவியானார். ஆகவே இப் பொழுது நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளு மாயிருக்கிறோம். ஏனெனில் தேவன், ஒரு ஸ்திரீயின் மூலம் பிறந்து, நமக்குள்ள சரீரம் போன்ற சரீரத்தைக் கொண்டவராய், நமது இனத்தான் ஆனார். தேவனே! வெறொரு ஆள் அல்ல, தேவனே! 165.  1 தீமோ.3:16 இவ்வாறு உரைக்கிறது அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத் திலே வெளிப்பட்டார் (தேவன்!)  ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... யோவான் 1:1,14 166. வார்த்தை மானிடனாகி, நமது இனத்தான் ஆனது. அவர் மனிதனானார் ஓ! அவர் மரணத்தின் மூலம் நான் ஜீவனாகும் பொருட்டு, அவர் மரணமானார்... அவருடைய நீதியின் மூலம் நான் ஜீவனைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் பாவமானார். அவருடைய தரித்திரத்தின் மூலம் நான் ஐசுவரியனாகும் பொருட்டு, அவர் தரித்திரனானார். அவருடைய கிருபையின் மூலம் நான் அவராகும் பொருட்டு, அவர் நான் ஆனார். ஓ, என்னே! அப்படியானால், தேவனுடைய வல்லமை என்ன வென்பதை சிந்தித்துப் பாருங்கள்! அது வேதபூர்வமானது. அப்படித்தான் வேதம் கூறுகிறது.  167. பாவிகளாக, தேவனுக்குப் புறம்பானவர்களாக இருந்த நாம் தேவனிடத்தில் சேர்க்கப்பட்டு, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக ஆவதற்கு - பணிவிடையாளர் அல்ல - பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். புறஜாதி சபை ஒரு போதும் வேலைக்காரனாக இருக்காது. இல்லை, ஐயா! புறஜாதி சபை குமாரனையும் குமாரத்தி யையும் கொண்டதாக இருக்கும். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற, தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக் கிறீர்கள், நீங்கள் ஒர்பாள் கூட்டத்தாராக இருந்து ஓடிப் போயிருந்தால்.... ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் வரைக்கும் சென்றிருந்தால், நீங்கள் குமாரரும் குமாரத் திகளுமாகி விடுகிறீர்கள். இப்பொழுது, குமாரரும் குமாரத்திகளும்... 168. தேவனுக்கு முன்பாக யாருக்கு அதிக அதிகாரம்? தேவ தூதன் யார்? அவன் ஒரு பணிவிடையாளன். அது சரியா? அவர்கள் பணிவிடையாளர்கள். நீங்கள் யார்? அவருடைய குமாரனும் குமாரத்தியும். அப்படியானால் பரலோகத்தில் யாருக்கு அதிக அதிகாரம்? கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவிக்கா, அல்லது அவருடைய வலது பாரிசத்தில் நின்று கொண்டிருக்கும் பிரதான தூதனுக்கா? பாவமில்லாமல் அவருடைய பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் பிரதான தூதனைக் காட்டிலும் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவிக்குத் தான் பரலோகத்தில் அதிக அதிகாரம் உண்டென்பது உண்மையே. ஏனெனில் அவன் குமாரனாக இருக்கின்றான். நிச்சயமாக வேலைக்காரனைக் காட்டிலும் குமாரனுக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கும். ஓ, நாம் யாரென்பதை மறந்து விடுகிறோம். நாம் இப்பொழுதுள்ள நிலைக்குக் காரணம் யாரென்பதை நாம் அநேக சமயங்களில் மறந்து விடுகிறோம். நாம் இந்நிலையை அடைந்த பிறகு, நாம் எப்படி இந்நிலையை அடைந்தோம் என்பதை மறந்து விடுகிறோம். தேவன் தாமே...'' ஓ, ஆதாமின் விழுந்து போன சந்ததிக்கு எவ்வளவு விலைமதிக்க முடியாத அன்பை தேவன் தந்தார் தம்முடைய ஒரே குமாரனை பாடுபடக் கொடுத்து அவருடைய கிருபையினால் நம்மை மீட்டுக் கொண்டார். (ஓ, நமக்கு அது எப்படித் தெரியும்?) பிளவுண்ட கற்பாறைகளும் இருண்ட ஆகாயத்தின் மத்தியிலும் என் இரட்சகர் தலையை சாய்த்து ஜீவனை விட்டார் திறவுண்ட திரை பரலோகத்தின் மகிழ்ச்சிக்கும் முடிவற்ற நாளுக்கும் வழியைக் காண்பித்தது கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன் மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே மகிமையின் ராஜகுமாரன் மரித்த அற்புதமான சிலுவையை நான் கண்ணோக்கும் போது என் பாவம் அனைத்தையும் நஷ்டமாக எண்ணினேன். (அது உண்மை ) 169. ஒருவர் கூறினார் :  அவர் வாழ்ந்தபோது என்னை நேசித்தார், மரித்தபோது, என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்ட போது, என் பாவங்களை தூரத்தில் சுமந்து சென்றார் உயிரோடெழுந்து, என்றென்றைக்கும் இலவசமாக நீதிமானாக்கினார். ஒரு நாள் அவர் வருவார் - ஓ மகிமையான நாள்! 170. அதுவே சபையின் சாராம்சம். அதுவே அதன் குறிக்கோள். அதுவே அதன் உள்ளான சிந்தனை. இந்த பூமியானது, ஆதாமின் விழுந்து போன சந்ததியை மீட்பதற்கென, இந்த இனத்தான் மீட்பரின் இரத்தத்தில் மூழ்கப்பட்டுள்ளது.  171. கவனியுங்கள், இதோ அவர், இனத்தான் மீட்பர், முதலாவ தாக, அவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். கிறிஸ்துவாகிய இயேசுவைக் காட்டிலும் தகுதியுள்ளவர் யார்? அடுத்தபடியாக, அவரிடம் பணம் இருக்க வேண்டும். அவர் அதைச் செய்ய திறனுள்ளவராக இருக்க வேண்டும். பரலோகம் அவருக்குச் சொந்தம். அது சொந்தமென்று அவர் நிரூபித்தார். அவரால் ஐந்து அப்பம் இரண்டு மீன்களை எடுத்து ஐயாயிரம் பேர்களை போஷித்து, மீதியானவைகளை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுக்க முடிந்தது. அவரால் கிணற்றிலிருந்த தண்ணீரை எடுத்து அதை திராட்சை ரசமாக மாற்ற முடிந்தது. அவரால் கடலி லிருந்து மீனைப் பிடித்து அதன் வாயிலிருந்து ஒரு பொற்காசை எடுக்க முடிந்தது. ஆமென்.  172. ஆனால் அவர் தரித்திரரானார், அவருக்கு தலை சாய்க்க இடமில்லை. அவர் இனத்தான் ஆனார். அவர் ஐசுவரியவான் களுக்கு இனத்தான் ஆகவில்லை, அவர் எல்லா மனிதருக்கும் இனத்தான் ஆனார். அவர் மீட்பரின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். 173. பிறகு அவர் என்ன செய்ய வேண்டியிருந்தது? அவர் பகிரங்க அறிக்கை செய்ய வேண்டியிருந்தது. அடுத்த நாள் காலையில் ரூத்... இல்லை, நகோமி, “ரூத், பொறுத்திரு. எல்லாம் இப்பொழுது சரியாகிவிடும். ஏனெனில் அவனுடைய பார்வையில் உனக்கு தயை கிடைத்தது'' என்றாள்.  174. தேவனே, எனக்கும் அவருடைய பார்வையில் தயை கிடைக்கட்டும். அப்பொழுது காலை விடியும்போது: தேவ எக்காளம் முழங்கி, காலம் என்ற ஒன்று இல்லாமல் பூமியில் இரட்சிக்கப்பட்டவர் மறுகரையில் ஒன்று சேர்ந்து பெயர் கூப்பிடும்போது, நானும் அங்கிருப்பேன். 175. இப்பொழுது இளைப்பாறி, முழு மீட்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கவனியுங்கள் : “நான் இப்பொழுது அதன் ஒரு பாகத்தைப் பெற்றிருக்கிறேன். நான் வீட்டுக்கு போர்வை நிறைய வாற் கோதுமை கொண்டு சென்றேன். அங்கு நான் அடைந்தேன்..” அவன் அதை அவளுக்குக் கொடுத்தான் - ஆறுபடி அளந்து கொடுத்தான். ஆறு என்பது “இவ்வுலகம் ஆறாயிரம் ஆண்டு கால மாக உள்ளதைக் குறிக்கிறது.'' ஆறு என்பது மனிதனின் நாள். மனிதன் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டான். இவ்வுலகம் சிருஷ்டிக்கப்பட ஆறாயிரம் ஆண்டுகளாயின. ஏழாயிரத்து ஆண்டில் தேவன் இளைப்பாறினார். ஆறாயிரம் ஆண்டுகளாக சபையானது இந்த வாற்கோதுமை அப்பங்களான தேவனுடைய வல்லமையைக் கொண்டதாய் பாவத்தை எதிர்த்துப் போராடி அதன் பிறகு நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக் கும். அது உண்மை . இளைப்பாறு - காத்திரு. முழு மீட்பின் நேரம் வரைக்கும். அவளுடைய தேவைக்கென அவன் ஆறுபடி மெல் லிய வாற்கோதுமையை அளந்து போர்வையில் கொட்டினான். அதை அனுபவிக்க நான் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன்.  176. இப்பொழுது, வேகமாக, நாம் கடைசி பாகத்துக்கு வருவோம். இப்பொழுது நாம் காண்பது என்னவெனில், அடுத்த நாள் காலை அவள் படுக்கையை விட்டு எழுந்தபோது, அவள் மகிழச்சியுள்ளவளாய், பொறுத்திருந்தாள். அந்த மனிதன் வந்தான். அவன் சென்றான்... வேறொரு இனத்தான் இருந்தான். அவனுக்குத்தான் முதலாவதாக அந்த பெண்ணின் மேல் உரிமை இருந்தது. அதைக் கூற எனக்கு நேரம் உள்ளதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) சரி, ஒரு நிமிடம், அதின் ஒரு பாகத்தையாவது நாம் பார்ப்போம். 177. இந்த உவமையில், அடுத்தபடியாக உங்கள் மீது ஒரு வாய்ப்பைக் கொண்டிருந்தவன் பிசாசானவன். ஏனெனில் நீங்கள் பாவம் செய்து விட்டீர்கள். முதலில் நீங்கள் அவனுக்கு தான் உரிமையுள்ளவர்களாயிருந்தீர்கள்..... ஏனெனில் நீங்கள் அவனு டைய பொருளாயிருந்தீர்கள். நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுபவர்களாய் இவ்வுலகத்தில் வந்தீர்கள். பிசாசினால் உங்களை மீட்க முடியாது. பாருங்கள்? அவனால் உங்களை மீட்க முடியாது. எனவே கிறிஸ்து உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மீட்டுக்கொள்ள இவ்வுலகில் மனிதனாய் வந்தார். உங்களால் அதைக் காண முடிகிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) மற்ற மனிதனால் அதைச் செய்ய முடியவில்லை. பிசாசு பாவங்களுக்காக மரிக்க முடியாது. ஏனெனில் சீர்குலையப் பண்ணி பாவத்தை பிறப்பித் தவன் அவனே. பாருங்கள், எனவே அவனால் அப்படிச் செய்ய முடியாது, அவன் தன்னுடைய சுதந்திரத்தைக் கெடுத்து விடு வான்... மற்ற மனிதன். சாத்தான் தன் சுதந்திரத்தைக் கெடுத்து விடுவான், ஏனெனில் அவன் ஒரு பிசாசு. முதலாம் பிசாசை எடுத்துப் போட அவன் வேறொரு பிசாசாக ஆக முடியாது. அவன் பாவமாக முடியாது, ஏனெனில் அவன் ஏற்கனவே பாவமாக இருக்கிறான். ஆனால் பாவமில்லாத கிறிஸ்து நம்மை மீட்க, நமக் காக பாவமானார். அல்லேலூயா, நாம் மீட்கப்பட்டோம். மீட்கப் படுதல் என்றால் “திரும்பக் கொண்டு வரப்படுதல்'' என்று பொருள். நாம் மீட்கப்பட்டோம். 178. எனவே, அடுத்த நாள் காலையில் அவர்கள் பகிரங்க அறிக்கை செய்ய வேண்டும். போவாஸ் சென்று அந்த மனிதனை பட்டண வாசலில் மூப்பர்களுக்கு முன்பாக சந்தித்தான். அது ஒரு பொதுவான இடமாக இருக்க வேண்டும். அவன் அவனு டைய முகத்தை நோக்கி, 'அவளை நீர் மீட்டுக் கொள்கிறீரா?'' என்று கேட்டான். அவன் ரூத்தை அடைவதற்கு, முதலில் நகோமியை மீட்க வேண்டும்... அவ்வாறே, கிறிஸ்து புறஜாதி மணவாட்டியை அடைவதற்கு முதலில் யூத சபையை மீட்க வேண்டியிருந்தது. அவள் நகோமியுடன் அந்நிய தேசத்தாளாக வேறொரு நாட்டிலிருந்து வந்தாள். அவள் ஒரு மோவாபிய பெண், அஞ்ஞானிகள். புறஜாதிகளாகிய நாமும் அப்படித்தான் அஞ் ஞானிகளாக இருந்தோம். ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள்... அவன் நகோமியைப் பெற வேண்டியிருந்தது. அவன் நகோமியை பெறும்போது, அவளுக்கிருந்த எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கிறான்.  179. ஞாபகம் கொள்ளுங்கள், கிறிஸ்து வந்தபோது புறஜாதி சபையைக் குறித்துப் பேசவில்லை. அவர் தமக்குச் சொந்தமானவர் களிடம் செல்ல வந்தார். “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.” அவர் எப்பொழுதுமே தமக்குச் சொந்தமனாவர் களிடமே சென்றார். “நீங்கள் புற ஜாதியார் நாடுகளுக்குப் போகா மலும், சமாரியப் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோக ராஜ்யம் சமீபத்திருக்கிறது என்று பிரசங்கி யுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற் றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.'' அது சரியா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். முதலில் அங்கு போங்கள்... அவர் அந்தச் சபையை மீட்க வேண்டியிருந்தது. அதை அவர் மீட்டுக் கொண்ட பின்பு, புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக் கொண்டார். ஆமென். அதுதான் அதில் இருக்கின்ற கொடுத்து வாங்குவதைக் குறித்த ஒப்பந்தப் பேரம். பாருங்கள். அவர் சபையை மீட்ட போது மணவாட்டியைப் பெற்றுக்கொண்டார்  180. இப்பொழுது, போவாஸ் பகிரங்கமாக... அவன், ''அவளை மீட்டுக் கொள்கிறீரா?'' என்று கேட்டான். அவன், “முடியாது'' என்று சொல்லி விட்டான். 181. அப்பொழுது அவன் பகிரங்க அறிக்கை செய்ய வேண்டிய தாயிருந்தது. அவன் தன் பாதரட்சைையக் கழற்றி மற்றவனிடம் கொடுத்து, “இன்றையத்தினம் நான் நகோமியை மீட்டுக் கொண்டு ரூத்தை என் மனைவியாக்கிக் கொண்டேன் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் அறியக்கடவர்கள்'' என்றான். ஆமென். “ரூத்தை என் மணவாட்டியாக ஏற்றுக் கொள்கிறேன்.'' யார் அப்படிச் சொன்னது? அறுப்புக்கு எஜமான். ஆமென். அதோ அவள். “நான் நகோமியை மீட்டுக் கொண்டு, ரூத்தை ஏற்றுக் கொள்கிறேன். ரூத் என் மணவாட்டியாயிருப்பாள்.''  182. அவர்கள் என்ன சொன்னார்கள்? "கர்த்தர் ராகேலைப் போலவும் லேயாளைப் போலவும் இவளை வாழ்ந்திருக்கச் செய்து, இஸ்ரவேலில் இவள் ஆயிரக்கணக்கானவர்களை எழுப்புவாளாக.'' அவள் அப்படியே செய்தாள், அது உண்மை பாருங்கள், அவன் பகிரங்க அறிக்கை செய்தான். 183. இயேசு என்ன செய்தார்? அவரும் பகிரங்க அறிக்கை செய்தார். சாத்தான் பாவியாக இருந்தபடியால் பாவத்துக்காக மரிக்க முடியவில்லை. அவன் பாவத்துக்கு பிதா. ஆனால் இயேசு, குற்றமற்றவர், பரலோகத்தின் தேவன், மரிக்க அவசியமில்லாத வர், கீழே இறங்கி வந்து, வானத்துக்கும் பூமிக்கும் நடுவே உயர்த்தப்பட்டு மரித்து, தமது மரணத்தின் மூலம் பகிரங்க அறிக்கை செய்தார். பகிரங்க அறிக்கை! அவருடைய வஸ்திரங்களை அவர்கள் களைந்து, அவரை அவமானப்படுத் தினார்கள். அவர் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினார். நம்மை மீட்பதற்கென, அவர் பாவமுள்ள, அவமானமுள்ள மரணம் எய்த வேண்டியிருந்தது. பகிரங்க அறிக்கை! ஆமென். 184. அவர் என்ன செய்தார்? தம்முடைய சொந்த நீதியைக் உதைத்துப்போட்டு, தம்முடைய சொந்த மகிமையை உதைத்து தள்ளி... “எனக்கு அதிகாரம் உண்டு. நான் பிதாவை வேண்டிக் கொண்டால் அவர் எனக்கு பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை அனுப்புவார்.'' அவர்கள் போக்கையே மாற்றியிருப்பார்கள். ஒரே ஒரு தூதன் அதைச் செய்திருக்க முடி யும். அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை வரவழைத்திருக்க முடியும். அது 40,000 தேவதூதர்கள். அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர், “நான் பிதாவை வேண்டிக் கொண்டால் அவர் உடனே... (அது இப்பொழுதே!)... எனக்கு பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை அனுப்புவார். அவர்கள் இங்கு வந்து கவனித்துக் கொள்வார்கள்.'' ஒரே ஒரு தேவதூதனால் என்ன செய்ய முடியும்? ஒரு நொடிப்பொழுதில் அவன் இந்த பூமியை அழித்துப் போடுவான். அப்படியானால், பாருங்கள், ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் அவரிடம் வந் திருக்க முடியும். பாருங்கள்? ஆனால் அவர் அதை உதறித் தள் ளினார். அவர் அதை ஒருபுறம் வைத்துவிட்டார். அவர் தமது மதிப்பு அனைத்தும் ஒரு புறம் தள்ளி வைத்து, உங்களுக்காகவும் எனக்காகவும் பாவியானார். 185. இப்பொழுது முடிக்கும் தருணத்தில் இதைக் கூற விரும்பு கிறேன். போவாஸ் அதைச் செய்தான். அதன் பிறகு அவன் ரூத்தை மணந்தான். அவளுக்கு ஓபேத் என்னும் மகன் பிறந்தான். ஓபேத் ஈசாயின் தகப்பன். ஈசாய் தாவீதின் தகப்பன். தாவீது கிறிஸ்து வுக்கு ஆமென், கர்த்தராகிய இயேசுவின் தகப்பன்.  186. உங்களால் காண முடிகிறதா? அந்த நீதியின் மூலம், அந்த மிகத் தெளிவான தீர்மானத்தின் மூலம், அவர் நம்முடைய இனத்தான் மீட்பரானார். தேவன் நம்முடைய இனத்தானாகி, கீழே இறங்கி வந்து, நம்மைப் போல ஒருவராகி, மானிட சரீரம் பூண்டு, பசிதாகமுற்றார். “தாகமாயிருக்கிறேன், எனக்குத் தண்ணீர் கொடுங்கள்.'' அவர்கள் கசப்பு கலந்த காடியை அவருக்குக் குடிக்க் கொடுத்தார்கள். 187. அவருக்கு நம்மைப் போல் தாகமெடுத்தது. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருக்க அவர் அறிந்து கொண்டார். அவர் நம்மைப் போல் வியாதிப்பட்டார். அவர் “வைத்தியனே, உன்னை குணமாக்கிக் கொள்'' என்னும் பழமொழியை என்னிடம் அவர்கள் கூறமாட்டார்களா?'' என்று கேட்டார். அவருடைய மகத்தான வல்லமைகள் அவருக்காக அல்ல. அதை செய்ய அவருக்கு வல்லமை இருந்தது. ஆனால் அதை அவர் தமக்கென உபயோகித்துக் கொள்வதில்லை. இல்லை.  188. அன்றொரு நாள் ஒருவர் என்னிடம், “சகோ.பிரான்ஹாமே, ஏதாவதொன்று நடப்பதற்கு முன்பே, அதைக் குறித்து நீர் எல்லா வற்றையும் அறிந்து கொள்கிறீர். உமக்கு என்ன நடக்கும்?' என்று கேட்டார். 189. நான், 'அந்த வரம் எனக்கல்ல. அதை எனக்காக உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது'' என்றேன். அது உங்க ளுக்கே. நீங்கள் தான் அதன் நன்மையை பெறுகின்றீர்கள், நான் அல்ல. நான் உங்களுக்கு தேவனுடைய பொது ஜன ஊழியக்காரன் மாத்திரமே.  190. போதகர் ஒரு பொது ஜன ஊழியன். அவன் லீலிப் புஷ்பத்தை போல் அதில் நிலைத்திருக்கிறான். வண்டு அங்கு வந்து அதற்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறது. தேனீ அங்கு பறந்து வந்து அதற்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறது. வழிப் போக்கன் தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறான். லீலிப் புஷ்பம் தன் பிரகாசத்தை காத்துக் கொள்ள இரவும் பகலும் உழைக்கிறது. சுவிசேஷ ஊழியனும் அதையே செய்கிறான். அவன் தேவனுடைய வரிசையில் நடந்து சென்று, உலகம் தன்னிடம் பங்கு கொள்ள, தன் சாட்சியை காத்துக் கொள்கிறான். பாருங்கள், திரு. போதகர் லீலிப் புஷ்பம், மிகவும் நல்லவர். இயேசு, அதைக் கவனித்துப் பாருங்கள். சாலோமோனும் கூட அதைப் போல இல்லை” என்கிறார். அது உண்மை . டாக்டர் லீலிப் புஷ்பம், அவரை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பாருங்கள்?  191. “லீலீப் புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள், அவை எப்படி கடுமையாக உழைக்கின்றன... என்றாலும் சாலோமோன் முத லாய்த் தன் சர்வ மகிமையிலும்...'' லீலிப் புஷ்பம் தன் பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ள, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ள, தன் நறுமணத்தை காத்துக் கொள்ள, இரவும் பகலும் பாடுபட வேண்டியதாயுள்ளது. மற்றவை... அது தன்னைத் திறந்து கொடுக்கிறது, அவைகள் அதனிடம் வந்து பெற்றுக் கொள் கின்றன. வண்டும் தேனீயும்- நல்லதும், கெட்டதும் இவை யனைத்தும் - அங்கு வந்து அதனிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன.  192. அப்படித்தான் கிறிஸ்துவின் ஊழியக்காரனும் இருக்கிறான். அவன் தன்னைத் திறந்து கொடுத்து, “உலகமே, என்னிலிருந்து எடுத்துக் கொள்'' என்கிறான். அவனுக்கென்று ஒன்றுமில்லை, எல்லாம் மற்றவர்க்கே. கிறிஸ்துவும் நம்முடைய இனத்தான் ஆனபோது அப்படித்தான் ஆனார். உலகம் அவருடைய நீதியில் பங்கு கொண்டு, பாருங்கள், தேவனுடைய குமாரர்களாக வேண்டும் என்பதற்காக அவர் மனிதனானார்.  193. இப்பொழுது அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் விவாகம் செய்து கொண்டனர். அவர்கள் மூலம் இந்த பெரிய காரியம் நிகழ்ந்தது. கிறிஸ்துவை பெற்றபோது... அல்லது போவாஸை தனக்குப் புருஷனாக பெற்றபோது அவளுக்கு பலன் அளிக்கப்படுகிறது. கர்த்தர் அந்த மேகமில்லாத பிரகாசமான காலையில் வரும்போது, சபையும் அந்த நன்மையைப் பெறும். நாம் இப்பொழுது பொறுத்திருந்து காத்திருக்கிறோம். அந்த நாள் வரும். இப்பொழுது... ஏன், அது மீட்டுக் கொள்ளப்பட்டு விட்டது. 194. இப்பொழுது, ஜெப வரிசையை ஆரம்பிக்கும் முன்பு ஒரே ஒரு மேற்கோளை எடுத்துரைக்க விரும்புகிறேன். இன்று காலை நான் மீட்கப்படுதல் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் நோக்கினேன். என் ஆர்மீனிய சகோதரரே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இதை நான் கூற வேண்டியவனாயிருக்கிறேன், உங்களை புண் படுத்த அல்ல, உங்களை சிந்திக்க வைக்க. “ மீட்கப்படுதல்'' என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்னவென்று பாருங்கள். கிரேக்க மொழியில் அந்த சொல் “ஒரு அடிமையை சந்தையிலிருந்து வாங்குதல்'' என்று பொருள்படும். எனக்கு இப்பொழுது அந்த கிரேக்க சொல்லை உச்சரிக்கத் தெரியவில்லை. ஆனால் அது “ஒரு அடிமையை சந்தையிலிருந்து வாங்குதல்'' என்று பொருள்படும் - மீட்கப்படுதல் என்னும் சொல். 195. ஒரு மனிதன் ஏதாவதொரு தவறு செய்தால் அவன்.... அவனுடைய எஜமான் அவனை அடிமையாக விற்றுப் போடு கிறான் - மரணத்துக்கேதுவாக. அவன் சந்தையில் ஒரு அடிமை யாக இருக்கிறான். வேறொரு மனிதன் - அவனை வாங்கத் தகுதி யுள்ள மனிதன் - அங்கு வருகிறான். அவன் இந்த அடிமையைக் காண்கிறான். இந்த அடிமைக்கு அவனுடைய கண்களில் தயவு கிடைக்கிறது. எனவே அவன் இந்த அடிமையை மீட்டுக் கொள்கிறான். அது அவனை அடிமைச் சந்தையிலிருந்து வெளியே கொண்டு வருகிறது. இந்த மனிதன் இந்த அடிமையை தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறான். கவனியுங்கள், ஒருமுறை மீட்கப் பட்ட அடிமை மறுபடியும் சந்தையில் விற்கப்பட முடியாது. ஆமென். ஏனெனில் அவன் குறியிடப்படுகிறான். மீட்கப்படு வதற்கு போதிய தகுதியுள்ளவன் என்று அவன் ஒரு முறை எண்ணப்பட்டால், யாருமே அவனை மறுபடியும் அடிமையாக விற்க முடியாது.  196. ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம். ஒரு மனிதன் ஒரு முறை கிறிஸ்துவினிடம் வந்து, அவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்ட பிறகு, பிசாசு உங்களை மறுபடியும் அடிமையாக்கிக் கொள்ள முடியாது. நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் பாதுகாப்பாயிருக்கிறீர்கள். அந்த அடிமை... நீங்கள் யாத்திராகமம் புத்தகத்தை படித்து, அது லேவியர் பிரமாணம்தானா என்பதைக் கண்டு கொள்ளுங்கள். யாத்திராகமம் அல்ல, லேவியராகமம்..... அது பிரமாணம்தானா என்று பாருங்கள். ஒருமுறை மீட்கப்பட்ட அடிமை மறுபடியும் அடிமையாக விற்கப்பட முடியாது. அது உண்மை .  197. ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன்! நமது இனத்தான் மீட்பர், ஆவியாகிய பரலோகத்தின் தேவன். பூமிக்கு வந்து மாமிசத்தில் தோன்றி, என்னைப் போலவும், உங்களைப் போலவும் உருவம் கொண்டு, பாவமில்லாத அவர் பாவமுள்ள சரீரத்தின் ரூபத்தில் தோன்றி, நம்முடைய பாவங்களை அவர் மேல் ஏற்றுக்கொண்டு, நமக்கு இனத்தானாகி, தம்முடைய மரணத்தின் மூலம் பகிரங்க அறிக்கை செய்து, முழு கிரயத்தை செலுத்தி னதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 198. தேவனுடைய ஆவியானவர் அதற்கு சாட்சி கொடுத்தார். தேவாலயத்தின் திரைச் சீலை மேலிருந்து கீழ் வரைக்கும் கிழிந்தது -கீழிலிருந்து மேல் வரைக்கும் அல்ல, மேலிருந்து கீழ் வரைக்கும் கிழிந்து, தேவனே அதை மேலிருந்து கீழ் வரைக்கும் கிழித்து வழியைத் திறந்து கொடுத்தார் என்பதைக் காண்பித்தது. பலிபீடத்தின் கற்கள் கீழே புரண்டு, மின்னல் இருள் சூழ்ந்த கோபங்கொண்ட வானத்தில் பிரகாரசமாக அடித்தது. சூரியன் நடுப்பகலில் அஸ்தமித்தது, நட்சத்திரங்கள் ஒளி கொடுக்க மறுத்தன. நாம் மீட்கப்பட்டு விட்டோம் என எல்லாமே சாட்சி கொடுத்தன. அல்லேலூயா!  199. ஜெபம் செய்வோம். (சபையிலுள்ள ஒருவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் - ஆசி). இப்பொழுது உங்கள் தலைகள் சிறிது நேரம் தாழ்த்தியிருக்கையில், செய்திக்கு பிறகு, அது சபைக்கான ஒரு தீரக்கதரிசன முழக்க அழைப்பாகும்.  200. அவரை அறியாதவர் யாராகிலும் இங்கிருந்தால், உங்க ளுடைய வாழ்க்கை சரியாக இல்லாவிட்டால், இங்கு வந்து இந்த கூட்டத்தினருக்கு முன்பாக தேவனுடைய முன்னிலையில் நின்று, அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ள அழைக்கப்படு கிறீர்கள். ஞானஸ்நானத்திற்கென்று குளத்தில் தண்ணீர் உள்ளது. ஞானஸ்நான ஆராதனையை உடனடியாக தொடக்க ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். 201. நமது தலைகளை வணங்கியிருக்கும் இவ்வேளையில், நாம் “நான் போய்க்கொண்டிருக்கிறேன்'' என்னும் பாடலைப் பாட நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறாம். இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கட்டும். நான் போய்க் கொண்டிருக்கிறேன், ஆம், நான் போய்க் கொண்டிருக்கிறேன் மற்றவர் என்ன செய்தபோதிலும் நான் கிரயத்தை செலுத்துவேன் நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலருடன் நான் வழியைத் தெரிந்து கொள்வேன். நான் இயேசுவுடன் தொடங்கினேன், நான் போய்க் கொண்டிருக்கிறேன். நான் போய்க் கொண்டிருக்கிறேன், ஆம், நான் போய்க்கொண்டிருக்கிறேன் மற்றவர் என்ன செய்தபோதிலும்... (நீங்கள் உண்மையான அர்த்தத்தில் கூறுகிறீர்களா? அப்படியானால் இங்கு வந்து நில்லுங்கள்)...... நிந்திக்கப்படும்... (பழைய ஏற்பாட்டின் நகோமியைப் போல் நீங்கள் இணைந்து கொள்வீர்களா?)... வழியைத் தெரிந்து கொள்வேன். நான் இயேசுவுடன் தொடங்கினேன், நான் போய்க் கொண்டிருக்கிறேன். பெத்லகேம் தொழுவத்திலிருந்து அந்நியர் ஒருவர் தோன்றினார் பூமியில் அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன். வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும். அவரைப் போல இருக்க மாத்திரம் கேட்கிறேன் இயேசுவைப் போல் இருக்க... (இயேசுவைப் போல் இருக்க விரும்புகிறாயா?)... இயேசுவைப் போல் பூமியில் அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன். என்மேல் பிரகாசிக்கட்டும் கர்த்தாவே என் மேல் பிரகாசிக்கட்டும் கலங்கரை விளக்கத்தின் ஒளி என் மேல் பிரகாசிக்கட்டும் என்மேல் பிரகாசிக்கட்டும், கர்த்தாவே, என் மேல் பிரகாசிக்கட்டும் கலங்கரை விளக்கத்தின் ஒளி என்மேல் பிரகாசிக்கட்டும் இயேசுவைப் போல் .... (அவரைப் போல் வேறு யாராகிலும் இருக்க விரும்புகிறீர்களா?) வேறு யாராகிலும் இப்பொழுது வந்து, இந்த இளம் பெண்ணுடன் முழங்கால்படியிட விரும்புகிறீர்களா? பழைய ஏற் பாட்டின் ரூத்தைப் போல... இன்று காலை அவளுடைய வழியை பின்பற்ற விரும்புகிறீர்களா? ... அவரைப் போல் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன். இயேசுவைப் போல் இருக்க... இந்த பெண் செய்தது போல், வேறு யாராகிலும் நடந்து வந்து, இங்கு முழங்கால்படியுங்கள். நீங்கள் புறப்பட்டு விட் டீர்களா? உங்களுடைய கைகளை அவருடைய கையுடன் கோர்த் துக் கொள்வீர்களா? .... அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன். (சகோ. பிரான்ஹாம் 'அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன்' என்னும் பல்லவியை மௌனமாக இசைக் கிறார் - ஆசி).  202. எங்கள் பரலோகப் பிதாவே, 'இயேசுவைப் போல் இருக்க' என்னும் பாடலை சபை மௌனமாக இசைக்கும் இவ்வேளையில், இந்தப் பெண் இன்று காலை ரூத்தைப் போல் அடியெடுத்து வருகிறாள். ஐனா பெல் என்னும் இந்தப் பெண் பழைய ஏற்பாட் டின் ரூத்தைப் போல், முன் வந்து, கிரயம் என்னவாயிருந்த போதிலும் அதைச் செலுத்த வந்திருக்கிறாள்... அவள் எவ்வளவாக இகழப்பட்டாலும், கேலி செய்யப்பட்டாலும், அந்த இடத்தை அவள் எடுத்துக் கொண்டு, இங்கு நின்று, தன் பாவங்களை அறிக்கை செய்து, முழங்கால்படியிட்டு, அந்த மகத்தான அறுப் புக்கு தேவன் சிலுவையில் தொங்கிய இடத்தை பார்த்துக் கொண்டு, அங்கு பரிசுத்த ஆவியைப் பெறக் காத்திருக்கிறாள். வார்த்தை புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய கிருபை அவளுடன் பேசி, பழைய ஏற்பாட்டின் நகோமிக்கு செய்தது போல அவளை வழி நடத்தினது. அது சரியான இடத்தில் சரியான ஒருத்தியின் மேல் விழுந்தது. இப்பொழுது அவள் விசுவாசியின் ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கிறாள். கல்வாரி யண்டையில் அவள் முழங்கால்படியிட்டு, அங்கு தன் காரியங்கள் அனைத்தும் தள்ளிவிட்டு, கிறிஸ்து இயேசுவில் புது சிருஷ்டியாயிருக்கிறாள். 203. பிதாவே, இன்று காலை இந்தக் கட்டிடத்தில் உமக்குப் புறம்பேயுள்ள ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும், பெண்ணும் - உம்மை அறியாத ஒவ்வொருவரும், கர்த்தாவே, அவர்கள் இந்நிலையில் இவ்விடம் விட்டுப் போகாதிருக்கும்படி செய்யும். நாங்கள் எந்த நேரத்தில் நியாயத்தீர்ப்புக்கு வருவோ மென்று எங்களுக்குத் தெரியாது. ஒருக்கால் நாங்கள் வீட்டை அடையும் முன்பு, ஒரு விபத்து நேரிடலாம். ஒருவேளை எங்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். எங்களுக்குத் தெரியாது. ஓ, தேவனே, இந்த நேரத்தில் பரிசுத்த ஆவி இங்குள்ள போது, அவர் இங்குள்ளார் என்னும் சாட்சி நமக்குள்ள போது, பரலோகத்தின் தேவன் அளவு கடந்த தமது முடிவில்லாத இரக்கத்தினால் எங்களை உள்ளே கொண்டு செல்ல இங்குள்ள போது, எங்களை நாங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக. 204. கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குத் தாரும். இந்த பெண் இப்பொழுது செய்வது போல், மற்றவர்களையும் இன்று காலை பீடத்துக்கு அனுப்பி கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படி செய்வீராக. கர்த்தாவே, இதை அருளும், இந்தப் பெண்ணிடம் இரக்கமாயிரும். அவளுடைய குடும்பத்தினர்... அவளுடைய சகோதரன் என்னுடன் மேடையில் அமர்ந்துள்ளார். அவளுடைய சகோதரி உட் பின்னால் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய தாயும் தகப்பனும் இங்கு அமர்ந்துள்ளனர். கர்த்தராகிய தேவனே, நான் இரக்கத்துக்காக கெஞ்சுகிறேன். கர்த்தவே, அதை அருளும். என் இருதயத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீர் அறிவீர். கர்த்தாவே, நீர் சிந்தின உமது இரத்தம் கிருபையாக இந்நேரத்தில் வந்து இதை அருள வேண்டுமாய் உம்மை வேண்டிக்கொள்கிறேன். மற்றவர்கள் வருவதற்காகக் காத்திருக்கும் இவ்வேளையில் இதை அருளு வீராக... பிதாவே, மற்றவர்களும் வந்து கிறிஸ்துவின் மூலம் தேவனுடன் ஒப்புரவாகட்டும்.  205. இப்பொழுது நாம் காத்திருந்து வியந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் மறுபடியும் பாடுவோம். என்மேல் பிரகாசிக்கட்டும், ஓ கர்த்தாவே, என்மேல் பிரகாசிக்கட்டும். கலங்கரை விளக்கத்தின் ஒளி என்மேல பிரகாசிக்கட்டும். சரி. என்மேல்... (வரக்கூடியவர் வேறு யாராகிலும் உண்டா ?) .... என் மேல் பிரகாசியும். கலங்கரை விளக்கத்தின் ஒளி என்மேல் பிரகாசிக்கட்டும் என் மேல் பிரகாசிக்கட்டும், கர்த்தாவே, என்மேல் பிரகாசிக்கட்டும் கலங்கரை விளக்கத்தின் ஒளி என்மேல் பிரகாசிக்கட்டும். அது என்னை எப்படி மாற்றும்? இயேசுவைப் போல், இயேசுவைப் போல் பூமியில் அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன். 206. பிதாவே, தேவனே, அதுவே உண்மையில் எங்கள் சாட்சி. கர்த்தாவே, நாங்கள் அவரைப் போல் சாந்தகுணமுள்ளவர்களாய், தாழ்மையுள்ளவர்களாய், இனிமையுள்ளவர்களாய், எங்களைத் துன்புறுத்தி எங்களுக்கு தவறிழைப்பவர்களை எப்பொழுதும் மன்னிக்கிறவர்களாய் இருக்க விரும்புகிறோம். அவ்வாறே நாங்கள் இருக்க விரும்புகிறோம். இன்று காலை இங்கு முன்னால் வந்த இந்தப் பெண்ணுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். சிறிது கழிந்து இவள் வாழ்க்கை எவ்வாறு மாறும் என்று நாங்கள் எப்படி அறிவோம். அவள் வாழ்க்கையில், எங்கள் அனைவரும் போலவே, அவள் செய்த எல்லா தவறுகளும் அந்த இரத்த வெள்ளத்தில் இன்று காலை மூழ்கினதை அவள் கண்டாள்... தேவனே, இவள் பிரதிஷ்டை செய்யப்பட்ட வாழ்க்கையைக் கடைப்பிடித்து, அது அவள் கூட்டாளிகள் அனைவரையும் இந்த அனுபவத்துக்குள் கொண்டு வர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவள் இத்துடன் நின்று விடாமல், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்து, அந்த இடத்தைப் பார்த்து அங்கு படுத்துக்கொண்டு, அங்கே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வாளாக. கர்த்தாவே, இதை அருளும்.  207. பிதாவே, இன்னும் வரவேண்டியவர்கள் யாராகிலும் இங்கிருந்து அவர்கள் வராமலிருந்தால், உமது ஆவி அவர்களை விட வேண்டாம். அவர்களும் வந்து இந்தத் தீர்மானத்தைச் செய் யும் வரைக்கும், இரவும் பகலும் அவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்காமலிருக்கட்டும். கர்த்தாவே, கொடூரமாக இருக்க வேண்டும் என்றல்ல, ஆனால்.... ஓ, தேவனே, அவர்கள் எதை இழந்து போகின்றனர் என்றும், அந்த நாளில் அவர், “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள். அன்று காலை எட்டாம் பென் தெருவில் உன்னை அழைத்தேன். நீ வரவில்லை'' என்று கூறுவதைக் கேட்பேன் என்றும் அறிந்திருக் கிறேன். ஓ, தேவனே, அது அவர்களுக்கு எவ்வளவு பயங்கரமான நேரமாயிருக்கும். நாங்கள் அப்பொழுது தராசில் நிறுத்தப்பட்டு குறையக் காணப்படுவோம். பிதாவே, தெய்வீக சமூகத்தில் அந்த நிலை யாருக்குமே ஏற்படாமலிருக்க அருளுவீராக. அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்களாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 208. இன்று காலை நாம் கர்த்தருக்கு, அவருடைய நன்மைகளுக் காகவும் தயவுக்காகவும், நன்றி செலுத்த விரும்புகிறோம். நீங்கள் இவ்வளவு நேரமாக பொறுமையுடன் என்னோடு இருந்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி செலுத்த விரும்புகிறேன். சகோதரி ஐனா பெல், நான்... சகோதரி உட், அது உங்கள் சகோதரி தானே... சகோ. சார்லி அவர்களும் நாமும் நீண்ட கால மாக ஏறெடுத்த ஜெபத்தின் பலன் இது. சகோதரி ஐனா பெல், ஒரு நிமிடம் எழுந்து நிற்பாயா? நான்... அது சகோதரி உட். இன்று காலை இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட இவள், நமது சபையின் தர்மகர்த்தாவின் மைத்துனியாவாள். எத்தனை பேருடைய ஜெபங்கள்... சகோதரி ஐனா பெல், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன் பெயரை நான் சரியாக கூறினேன் என்று நினைக்கிறேன். அருமை சகோதரி, தேவன் உன்னை என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பாராக. நீ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், அதைச் செய்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி உனக்கு ஆலோசனை கூறுகிறேன்.  209. தேவன் என்றென்றைக்கும் உன்னோடு கூட இருந்து, உன் விலையேறப் பெற்ற கணவனை ஆசீர்வதிப்பாராக. சில நாட்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். நான் தவறாகக் கூறவில்லை யென்றால், அவருடைய பெயர் ஸ்டான்லி. அது சரியா? ஸ்டான்லி, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. குடும்பம் இனிமையானது. அது இப்பொழுது முன்னைக் காட்டிலும் இனிமையாயிருக்கும் என்று நம்புகிறேன். தேவன் என்றென்றைக்கும் உங்கள் அனைவரோடும்கூட இருந்து, உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கிருபையும் இரக்கமும் அருளு வாராக. கர்த்தருடன் தொடர்ந்து செல்லுங்கள். ஐனா பெல், ரூத்தைப் போல் அவருடன் ஒட்டிக்கொண்டு, முன்னேறிச் செல். சில நேரங்களில் அது கடினமாயிருக்கும். வழி இருளடையும். அப்பொழுதெல்லாம் குனிந்து தரையை பார்த்து விட்டு, வானத்தை அண்ணாந்து பார். இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகள் வழிநெடுக மேலே செல்வதைக் காண்பாய். அவர் வழிநடத்து வார். 210. இப்பொழுது ஏற்கனவே நடுப்பகல் 12.00 மணி ஆகிவிட் டது. நீங்கள் இன்னும் ஜெப வரிசை அமைக்க விரும்புகிறீர் களாம்; 211. பில்லி, எங்கே... என்ன நடக்கிறது? ஜெப அட்டைகள் விநியோகித்தாயா? எனக்கு.... அவன் ஜெப அட்டைகள் கொடுத்ததாக என்னிடம் கூறினான் என்று நினைக்கிறேன்... (யாரோ ஒருவர் “அதோ வருகிறார்'' என்கிறார் - ஆசி) அது என்ன? (பில்லிபால் "B" என்கிறார் - ஆசி) அதன் எழுத்தும் எண்ணும் என்னவென்று யாராகிலும் கூறுங்கள். என்ன? பி (B), 1 முதல் 100?.... 50 முதல் 100 சரி. பி.எண். 1 212. இப்பொழுது நமக்கு... இங்கு நிறைய ஜனங்கள் உள்ளனர், எனவே நம்மால்... அவர்களை நிற்கச் சொல்லிவிட்டு, வரிசையில் வரும்படிக் கூறி, அவர்களுக்காக ஜெபிப்போம்.  213. இப்பொழுது ஜெப வரிசை ஒன்றாகிலும் காணாதவர் எத்தனை பேர்? உங்கள் கைகளை நான் காணட்டும். என் கூட்டங்களில் ஜெப வரிசையில் வராதவர். ஓ, என்னே, அதைச் சற்று நினைத்துப் பாருங்கள். 214. நல்லது, நாம் ஜனங்களுக்காக ஜெபிக்கலாம், அல்லது சிந்தனைகளைப் பகுத்தறியலாம். ஜெப வரிசையே வைக்காமல், கூட்டத்தின் மத்தியிலிருந்து அவர்களை அழைக்கலாம். எப்படியானாலும் பரவாயில்லை. பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். ஆம், ஐயா. ஆனால் நாம் ஜெப வரிசையில் நிற்போம். எண் ஒன்று, யார் எண் ஒன்றை வைத்திருப்பது, ஜெப அட்டை B? எண்... ஐம்பது. என்னை மன்னிக்கவும். ஒன்று யாருமே வைத்திருக்கவில்லை. அது சரி. ஜெப அட்டை ஐம்பது, யார் அதை வைத்திருப்பது? ஐயா இங்கே வாருங்கள். ஜெப அட்டை இரண்டு … ஐம்பத்தொன்று, ஐம்பத்திரண்டு. ஜெப அட்டை ஐம்பத் திரண்டு. அது சரி. ஐம்பத்து மூன்று. ஐம்பத்து மூன்று. அது சரி. ஐம்பத்து நான்கு. இங்கே வாருங்கள். நீங்கள் பின்னால் இருந்தால், இங்கே வாருங்கள். இங்கே வாருங்கள். ஐம்பத்தொன்று, ஐம்பத்திரண்டு, ஐம்பத்து மூன்று, ஐம்பத்து நான்கு, யார் ஐம்பத்தைந்தை வைத்திருப்பது, ஜெப அட்டை ஐம்பத்தைந்து? அங்கே இருக்கின்ற பெண்மணி, நீங்கள். ஜெப அட்டை ஐம்பத்தாறு. முடியுமானால் சுவற்றின் ஓரமாக அங்கே நில்லுங்கள். ஐம்பத்தேழு, ஐம்பத்தெட்டு, ஐம்பத்தொன்பது, அறுபது. அறுபத்தொன்று, அறுபத்திரண்டு, அறுபத்து மூன்று,அறுபத்து நான்கு, அறுபத்தைந்து. பஸ்டி, அங்கே அந்த இடத்தினூடாக திரும்புங்கள், சகோதரனே, சரியாக அங்கே சரி. திரும்புங்கள். எத்தனை பேர் ஜெப அட்டை இல்லாமல் இருக்கிறீர்கள், கர்த்தர் உங்களை சுகமாக்க விரும்பிகிறீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அது சரி. நீங்கள் செய்ய வேண்டியது அது மாத்திரமே, இப்பொழுது அதை விசுவாசியுங்கள். அப்படியே விசுவாசியங்கள். சரி. ஐம்பத்தாறு, அது என்னிடம் இருக்கிறதா? ஐம்பத்தேழு, ஐம்பத்தேழு, ஐம்பத்தெட்டு, ஐம்பத்தொன்பது, அறுபது. அவர்கள் நிற்கட்டும். அறுபத்தொன்று - இரண்டு - மூன்று, நான்கு, ஐந்து. அவர்கள் நிற்கட்டும். அறுபத்தாறு, அறுபத்தேழு , அறுபத்தெட்டு, அறுபத்தொன்பது, எழுபது. அவர்கள் நிற்கட்டும் ஒரே நேரத்தில் எல்லாருமாக சேர்ந்து வர நான் விரும்ப வில்லை, கவனியுங்கள், எழுபது வரை நான் எண்ணை அழைக் கிறேன். எழுபதிலிருந்து எண்பது நில்லுங்கள். இங்கே இந்தப் புறமாக வாருங்கள், எழுபதிலிருந்து எண்பது. அது சரி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது. சரி. எண்பதிலிருந்து தொண்ணூறு, இங்கே நில்லுங்கள். டாக் உங்களால் கூடுமானால் அங்கே அவர்களுக்கு உதவி செய்யுங்கள். எண்பதிலிருந்து தொண்ணூறு இந்தப்புறமாக நிற்கவும். தொண்ணூரிலிருந்து நூறு, இந்தப் பக்கமா நில்லுங்கள். இங்கே சரி. 215. சரி, அவர்கள் வரிசைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, சபையை ஒன்று கேட்க விரும்புகிறேன். என் கூட்டங்களுக்கு முன்பு வராத அந்நியர் எத்தனை பேர் உள்ளனர்? ஒருவன் மற்ற வனை சுகப்படுத்த முடியாதென்று எத்தனை பேருக்கு தெரியும்? மருத்துவரும் கூட அப்படிச் செய்ய முடியாது. (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). இல்லை, ஐயா. மருத்துவர் சுகமளிப்பவர், அவர் இயற்கைக்கு உதவி செய்கிறார் என்று மாத்திரமே. தேவன் ஒருவரே சுகமளிப்பவர். பாருங்கள்? மருத் துவர் அறுவை சிகிச்சையின் மூலம் குடல் வாலை (appendix) எடுத்துப் போட முடியும். ஆனால் அவர் அறுத்த இடத்தை தேவன் மாத்திரமே சுகப்படுத்துகிறார். மருத்துவர் பல்லைப் பிடுங்க முடியும். ஆனால் அவரால் இரத்தப் பெருக்கை நிறுத்தி அதைச் சுகப்படுத்த முடியாது. தேவனே அதைச் செய்ய வேண்டும். 216. சரி. இயேசு இவ்வுலகில் இருந்த போது, அவர் சுகமளிப் பவர் என்று உரிமை கோரவில்லை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அவர், “நான் சுயமாய் இந்த கிரியைகளைச் செய்யவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற என் பிதாவானவரே இந்த கிரியைகளைச் செய்து வருகிறார்'' என்றார். அது சரியா? எத்தனை பேர் அதை அறிவீர்கள், அவர் இங்கிருந்தபோது... (“ஆமென்'') எப்படி... அவர் இங் கிருந்தபோது எப்படிப்பட்ட ஊழியத்தைக் கொண்டிருந்தார்? அவர் செய்ய வேண்டுமென்று பிதாவானவர் அவருக்கு காண் பித்தத்தை அவர் செய்தார். அது சரியா? (“ஆமென்'') எத்தனை பேருக்கு அது தெரியும்? பரி.யோவான் 5:19ல் அவர், “பிதாவான வர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்'' என்றார். அது சரியா? (“ஆமென்'') “குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.''  217. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறாரா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அதை நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா (“ஆமென்”)அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால், அவர் அதே விதமாக எபபொழுதும் இருக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது? (சபைனானாயார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி).  218. சரி. அவர் எவ்வகையில் அதேவிதமாக இருக்கிறார்? ஒவ்வொரு கொள்கையிலும் அதேவிதமாக இருக்கிறார். அது சரியா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அவர் அதே தேவன், அதே சுகமளிப்பவர், அதே இரட்சகர், அவர் அதே விதமாக - அதே மனப்பான்மை. எதுவுமே மாறவில்லை. அது சரியா? அதே விதமாக இருக்கிறார். சரி, அவர் முன்பும் இப்பொழுதும் மாறாதவராக இருந்தால், அவர் அதே கிரியைகளை இப்பொழுதும் செய்வார். அது சரியா? (“ஆமென்'') எத்தனை பேருக்கு சத்தியமென்று தெரியும்? (“ஆமென்'')  219. இங்கு நான் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப் போகின்றேன். நான் இன்னும் காத்திருக்கிறேன். 50 பேர் கூட வரிசையில் நின்று கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, இல்லை. சிலர் நேரத்தோடு வீடு திரும்பியிருக்கக் கூடும். சிலர் செல் வதை நான் கண்டேன். சரி, இந்த குறுகிய ஜெப வரிசை. எத்தனை பேருக்கு... இந்த வரிசையிலுள்ள எத்தனை பேர் எனக்கு அந்நியர்? உங்களைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது என்று அறிந் திருப்பவர்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள். 220. உங்களைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது என்று அறிந்துள்ள அந்நியர் எத்தனை பேர் இவ்வரிசையில் உள்ளனர்? நாங்கள் காண உங்கள் கைகளை உயர்த்துங்கள். சரி, “அவர் இங்கிருந்தார்'' என்று நாம் சொல்லத்தக்கதாக எத்தனை பேர் சிந்தனைகளைப் பகுத்தறியும் வரிசையைக் காண விரும்புகிறீர்கள்? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) பாருங்கள், அது... அதனால் ஒன்றுமில்லை. அவர்கள் வரிசையில் வரும்போது அவர்களுக்கு நான் ஜெபிக்கலாம், அல்லது அவர்கள் சென்று உட்கார்ந்துக் கொள்ளலாம். எப்படியானாலும் பரவாயில்லை. பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தித் தர முடியும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ('ஆமென்'')  221. இப்பொழுது, அப்படியானால், சிறிது நேரம் அமைதியா யிருங்கள். நேரமாகிக் கொண்டிருக்கிறது. சிறிது நேரம் அமைதி யாயிருங்கள். இப்பொழுது உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். 222. நான் தவறான ஒலிப்பெருக்கி கருவியில் பேசிக் கொண் டிருக்கக் கூடும். இப்பொழுது சரியாயுள்ளதா? இரண்டு கருவி களுமே இணைக்கப்பட்டுள்ளன. அதுவும் கூடவா? (ஒரு சகோதரன், 'ஆம்'' என்கிறார் - ஆசி) அது சரி. 223. சரி, சிறிது நேரம் நாம் அமைதியாயிருப்போம். இவ் வரிசையிலுள்ளவர்களில் யாரையாகிலும் எனக்குத் தெரியுமா என்று காணப் போகின்றேன். 224. அங்கு நின்று கொண்டிருக்கும் ஆசாமியை எனக்குத் தெரியும். எனக்கு உம்மை எர்லைத் தெரியும், எர்ல், உம்மை எனக்குத் தெரியும் - எர்ல் காலின்ஸ் (சகோதரன் ஏர்ல் காலின்ஸ் “நான் ஜெப வரிசையில் இல்லை, சகோ.பில் ஜெபர்சன்வில்லிருந்து எங்களுடைய நண்பனை கொண்டு வந்துள்ளேன்'' என்கிறார் - ஆசி) (ஓ, ஆமாம்... அங்குள்ள அந்த மனிதனையும்). கொலராடோவில் நம்முடன் வேட்டைக்கு வந்திருந்த மனிதன் இவர்தானா? (“அநேகமாக எங்களை அடையாளம் கண்டு கொள்கிறீர், நாங்கள் சிறிது எடை குறைந்துள்ளோம்.) ஓ, என்னே, அதை யோசித்து பாருங்கள். நீர் மிகவும் வியாதிப்பட்டிருப்பதாக எர்ல் என்னிடம் கூறினார். நீர் வந்து விட்டீர்... உம்மால் நீண்ட நேரம் நிற்க முடிய வில்லை என்றால்... யாராகிலும் ஒருவர் அவருக்கு நாற்காலியை அங்கு போட்டுக் கொடுங்கள், அல்லது யாராகிலும் எழுந்திருந்து, சகோ.காலின்ஸ் அருகில் அவருக்கு இருக்கையை தாருங்கள். ஏனெனில் அவர் மிகவும் வியாதிப்பட்டிருக்கிறார். அவர் எடையில் 100 பவுண்டைக் காட்டிலும் அதிகம் இழந்து விட்டார். அவர் மிக, மிக வியாதியாயிருக்கிறார். நான் ஜெப வரிசைக்கு வரும் வரைக்கும் அவர் அங்கு உட்காரட்டும்.  225. நான் இன்னும் பார்க்கட்டும். எர்ல், அவருடன் வந்திருக்கும் இந்த மனிதன்... பின்னால் இருந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மனிதன். அவர் கென்டக்கியிலுள்ள லாக்ரேன்ஜிலிருந்து வந்துள்ளார். உம்மை எனக்குத் தெரியாதென்றா கூறுகிறீர்? எனக்கு உம்முடைய பெயர் தெரியாது. ஆனால் எனக்கு உம்மைத் தெரியும். அங்கு சகோதரன் கிட்டை எனக்கு தெரியும். இங்குள்ள இந்தப் பெண்... அது சகோதரி ரூக்கா? அல்லது.... (சகோதரன் நெவில் “சகோதரி ஹார்டி'' என்கிறார். ஒரு சகோதரி “நான் சகோதரி டெய்லர்...?... ஹாட்டி'' என்கிறார்- ஆசி) அது அந்த பெண்தான். அவள் செல்லர்ஸ் பர்கி லிருந்து வருகிறாள். அது சரியென்று நினைக்கிறேன். அது சரியா? 226. சரி, வரிசையிலுள்ள அத்தனை பேர்தான் உண்மையில் எனக்குத் தெரியும். ஓ, ஆமாம். மில்டவுனிலிருந்து வந்துள்ள என் நல்ல நண்பர் பஸ்டி ராட்ஜர்ஸ் இங்கிருக்கிறார். வரிசையிலுள்ள மற்றவர் அனைவரும் எனக்கு அந்நியர் என்று கருதுகிறேன், தேவனுக்கு முன்பாக இதைக் கூறுகிறேன். எனக்குத் தெரிந்த வரையில் இவர்கள் எனக்கு அந்நியரே.  227. இப்பொழுது கூட்டத்திலுள்ளவரைக் காணட்டும். வியாதி யாயுள்ள எனக்கு அந்நியர், உங்கள் கரங்களையுயர்த்துங்கள். அது உங்கள் இருதயத்தில் உள்ளதை பிரதிபலிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் கரங்களை உயர்த்தின நிலையிலேயே இருங்கள். எனக்குத் தெரிந்தவர்கள்... சரி... நான் சுற்றுமுற்றும் எல்லா விடங் களிலும் பார்க்கிறேன்.  228. இப்பொழுது நான்... இன்னும் சிறிது நேரம் நீங்கள் காத்திருப்பதனால் உங்களுக்குப் பாதகமில்லை. உங்களை பயபக்தியுள்ள ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த ஒலிப் பெருக்கி பின்னால் நான் நிற்பது நலம், அப்பொழுது உங்களுக்கு நன்றாக கேட்கும். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் பிரசங்கிக்கும் இந்த செய்திகள் சத்தியமென்று விசுவாசிக் கிறீர்களா? (சபையோர் ஆமென்'' என்கின்றனர் - ஆசி). நீங்கள் நிச்சயமாக... அப்படி இல்லையென்றால், நீங்கள் இங்கு வந்திருக்க மாட்டீர்கள். 229. நான் என்ன செய்கிறேன் என்பதைக் குறித்த கருத்தை எனக்குத் தராமல், தேவன் இப்படிப்பட்ட ஒன்றைச் செய்வாரா? அவர் நிச்சயம் செய்ய மாட்டார். அவர் அப்படிச் செய்திருந்தார்....  230. இப்பொழுது, இயேசு கிறிஸ்து மாறவில்லை என்று நான் உரிமை கோருகிறேன். அவருடைய மரணம் அவரை மாற்ற வில்லை. அது அவரை மகிமைப்படுத்தினது. அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, உன்னதத்துக்கு ஏறிச் சென்றார். அவர் பரிசுத்த ஆவியைத் திரும்ப அனுப்பினார். அது தேவன்... அது அவர் மேலிருந்த பரிசுத்த ஆவி. நீங்கள் எல்லோரும் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). இயேசு இவ்வுலகில் இருந்தபோது, “நான் செய்கிற கிரியை களை நீங்களும் செய்வீர்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது (அது உலக ஒழுங்கு. அதாவது, அவிசுவாசிக் கும் சபை போன்றவை...). அவர்கள் என்னைக் காண மாட்டார்கள். நீங்களோ என்னைக் காண்பீர்கள் (அதாவது சபை, விசுவாசி)... ஏனெனில் நான் ('நான்'' என்பது தனிப் பிரதிப் பெயர்).... உங்களுடனே வாசம் பண்ணி உலகத்தின் முடிவு பரியந்தம் அங்கே இருக்கின்ற கிரேக்க பதம் “கன்சுமேஷன்'' (Consummation) அப்படியென்றால் “உலக முடிவு பரியந்தம்'' என்பதாகும். (“உலக முடிவு'' உண்டென்று நாம் விசுவாசிக் கிறோம்) உங்களுக்குள்ளே இருப்பேன். நான் செய்கிற கிரியை களை நீங்களும் செய்வீர்கள்'' என்றார். அது உண்மையா? (“ஆமென்')  231. இன்று காலை பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், பிராடெஸ் டெண்டுகள், கத்தோலிக்கர்கள், யூதர்களும் கூட இங்கு அமர்ந் துள்ளனர். நம்மிடையே தேவ சபை, நசரீன், யாத்திரீக பரிசுத்தர், யேகோவா சாட்சிகள் போன்ற பல்வேறு ஸ்தாபனங்கள் இன்று பிற்பகல் இங்கு உள்ளன. அவர்களை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் சுற்றுமுற்றும் பார்க்கும்போது, மேதோடிஸ்டுகள், லூத்தரன்கள், பெந்தெகொஸ்தேயினர் போன்ற வெவ்வேறு ஸ்தாபனத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்தவர்கள் இங்குள்ளதைக் காண்கிறேன். அவர்கள் எல்லாம் இப்பட்டணத் திற்கு வெளியேயிருந்து நம்மிடையே வந்துள்ளவர்கள். இங்குள்ள பிரான்ஹாம் கூடாரம் சிறியதுதான். ஆனால் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து ஜனங்கள் இங்கு வருகின்றனர்.  232. இப்பொழுது இதை நாம் எடுத்துக் கொண்டு, ஆழ்ந்து யோசித்து, நிதானமாக சிந்தித்து, பயபக்தியுடன் இந்த கேள்விக்கு பதில் கூறுவோம். அவர் மரித்த நிலையில் இல்லை என்றால், அவருக்கு உங்கள் பேரிலும் வியாதியஸ்தர் பேரிலும் உள்ள மனப்பான்மை நேற்றிருந்தது போலவே இன்றைக்கும் மாறாததாயிருக்கும். அவருடைய மனப்பான்மை நேற்று எவ்வா றிருந்தது? “நீ விசுவாசித்தால், என்னால் கூடும்.” அது சரியா? நீ விசுவாசித்தால்.''  233. அந்த மனிதன், 'ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமா யிரும். என் மகன் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறான். அவனை உம்முடைய சீஷர்களிடம் கொண்டு வந்தேன். அவர்கள் கூச்சலிட்டு, சத்தமிட்டு, எல்லாம் செய்தனர்'' என்றான்.  234. அவர், “நீ விசுவாசித்தால், என்னால் கூடும்” என்றார்.  235. இப்பொழுது கவனியுங்கள். இயேசு எப்படி செய்தார்? அவர் நேற்று என்னவாக இருந்தார்? எப்படி ஊழியம் செய்தார்? இதை நான் அந்நியர்களுக்கு எடுத்துரைக்கிறேன். அவர் நேற்று எப்படியிருந்தார் என்று பார்ப்போம். விரைவாக வேதத்திலிருந்து சில பாகங்களை எடுத்துக் காண்பிக்க எனக்கு மூன்று நிமிடங்கள் மாத்திரமே பிடிக்கும். 236. அவருடைய ஊழியம் முதலில் தொடங்கின போது, அந்திரேயா என்னும் பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் மீன்பிடிப்பவன். அவன் அவர்மேல் விசுவாசம் கொண்டு இரட்சிக்கப்பட்டான். அவன்போய் தன் சகோதரன் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தான். உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? அவன் படிப்பறியாத மீன்பிடிப்பவன். அவனுக்கு தன் பெயரையும் கூட கையொப்பமிடத் தெரியாது. அவன் இயேசு வுக்கு முன்பாக வந்தபோது இயேசு அவனைப் பார்த்து, “உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்'' என்றார்.  237. அது வேதப்பூர்வமானதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் மேசியாவென்று அவர்கள் அறிந்திருந்தனர். ஏனெனில், அவர்... தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்தார்.... மேசியா தோன்றும்போது, அவர் தீர்க்கதரிசியாயிருப்பார் என்று மோசே முன்னுரைத்தான். அது சரியா? (சபையார் “ஆமென்'' என்கின் றனர் -ஆசி) தீர்க்கதரிசி - மேசியா. அவர் அவனைப் பார்த்து, “உன் பெயர் சீமோன். உன் தகப்பனின் பெயர் யோனா" என்றார். அவர் மேசியாவென்று அவன் கண்டு கொண்டான். 238. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீ வேறொரு ஜாதியை சேர்ந்தவள். யூதர்களும் சமாரியர்களும் மாத்திரமே அவரை ஏற் றுக் கொண்டனர். புறஜாதியாராகிய நாமோ பிறகு அதற்குள் வர வேண்டியதாயிருந்தது. கிணற்றண்டையிலிருந்து அந்த ஸ்திரீ.... அவள் சமாரிய ஸ்திரீ. அவள் தண்ணீர் மொண்டு கொள்ள அங்கு வந்தாள். இயேசு, “தாகத்துக்குத் தா'' என்று சொல்லி அவளிடம் பேசத் தொடங்கினார் - நான் கூட்டத்திலுள்ள யாரோ ஒருவருடன் பேசுவது போல். அவர் “தாகத்துக்குத் தா' என்றார். அவர்கள் அதற்கு முன்பு சந்தித்ததில்லை.  239. அவள், “அப்படி வழக்கமில்லையே, இங்கு நாங்கள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறோமே'' என்றாள். முன்பு தென் பாகத்தில் நம்முடைய கறுப்பு நண்பர்களுக்கு நாம் செய்தது போல். இப்பொழுது அது கிடையாது. அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். அவள், “நாங்கள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறோம். நீர் யூதனாயிற்றே. அது உமக்கு வழக்கமில்லையே” என்றாள். இயேசு ஒரு யூதன். அவள் ஒரு சமாரிய ஸ்திரீ. எனவே அவள், “நீர் யூதனாயிருக்க ஒரு சமாரிய பெண்ணிடத்தில் எப்படி கேட்க லாம்?'' என்றாள். 240. அவர், ''ஸ்திரீயே, நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக் கிறாய் என்று அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் தண் ணீர் கேட்டிருப்பாய்'' என்றார்.  241. அது அந்த அழகிய பெண்ணின் வாயை அடைத்தது, அவள் அவரை நோக்கி, “மொண்டுக் கொள்ள உம்மிடத்தில் ஒன்றுமில் லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே'' என்றாள்.  242. அவர், “நான் கொடுக்கும் தண்ணீ ர் நித்திய ஜீவன்'' என்றார். 243. முடிவில் அவளிடமிருந்த தவறு என்னவென்று அவர் அறிந்துகொண்டார். எத்தனை பேருக்கு (அந்நியர்களில்) அவ ளிடமிருந்த தவறு என்னவென்று தெரியும்? அவளுக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள். அவர் அவளிடம் என்ன சொன்னார்? “நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா'' என்றார்.  244. அவள் அவரைப் பார்த்து, “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள்.  245. அவர், “நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உன்னுடன் வாழ் கிறவன் உனக்குப் புருஷனல்ல” என்றார்.  246. அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும் போது..... (அது இயேசு) இவைகளை உங்களுக்கு அறிவிப்பார். ஏனெனில் அவர் அந்த தீர்க்கதரிசி என்று நாங்கள் அறிவோம். மேசியா வரும்போது, இதைச் செய்வார் என்று அறிவோம். ஆனால் நீர் யார்?” என்றாள். “நானே அவர்'' என்றார். 247. அதைக் கேட்டபோது அவள் ஊருக்குள்ளே ஓடி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாதானே?” என்றாள்  248. அது நேற்று மேசியாவின் அடையாளமாக இருந்து, அவர் இன்றும் மாறாதவராயிருந்தால், அது இன்றைக்கும் அதே அடை யாளமாக இருக்கும். (சபையார் 'ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அந்நியர்களாகிய நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா. (“ஆமென்'') இது ஜெப வரிசையிலுள்ள உங்களுக்கு.  249. கூட்டத்திலுள்ளவர்களுக்கு, அவர்கள் உறுதியாக விசுவாசிப் பதற்கு ஒரே ஒரு வேதவாக்கியம். அவர் இப்பொழுது நம்மு டைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக் கிறீர்கள்? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நீங்கள் எல்லோரும்..... (ஒலி நாடாவில் காலி இடம். சகோ. பிரான்ஹாம் சிந்தனைகளைப் பகுத்தறியும் வரத்தைக் கொண்டு ஊழியம் செய்கிறார் - ஆசி)  250. அதுதான் அவருக்குள்ள கோளாறு. ஏனெனில் அதிகமான ‘பிராஸ்ட்ரேட்', (சகோதரன் “அது சரி'' என்கிறார் - ஆசி) இரவில் எழுந்திருப்பது போன்றது. நீர் ஓஹையோவைச் சேர்ந்தவர். நீர் சகோ.சலிவன் சபைக்குச் செல்கிறீர். சகோ.சலிவன் அங்கு நின்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். நீர் கிட் தம்பதிகளுடன் வந்திருக்கிறீர்கள். அது உண்மை . (“அது சரி'') சரி, இந்த நேரத்தில் உமக்கு வித்தியாச உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. (“அது சரி'') அது உம்மை விட்டுப் போய்விட்டது. நீர் வீடு திரும்பும்போது, உமது விசுவாசம் உம்மை குணப்படுத்துகிறது (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). தேவன் உம்மை ஆசீர் வதிப்பாராக. 251. உம்மை தெரிந்திருக்கும் விஷயத்தில், உம்மைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாதென்று பரலோகத்தின் தேவன் அறிவார். உமக்கு என்ன கோளாறு என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வழியும் இல்லை. நீர் இங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதன். உமக்கு ஒரு ஜெப அட்டை கொடுக்கப்பட்டது... அதில் ஒரு எண் இருந்தது. நீர்.... பையன்கள் அதை உமக்குக் கொடுத்தனர். நீர் ஜெப வரிசையில் இங்கு அழைக்கப்பட்டீர்.  252. இதை நேரடியாகக் கூற விரும்புகிறேன். பாருங்கள், அது அந்த ஒருமுறை. அது கடினமானது. இன்று காலை நான் பிரசங் கித்தத்தைக் காட்டிலும் ஒரு முறை நான் சிந்தனைகளைப் பகுத் தறிந்தது என்னை அதிக பலவீனமாக்கி விட்டது. ஒன்று புறப்பட்டு சென்றது... பாருங்கள்? ஒன்று புறப்பட்டுச் சென்றது.  253. இளைஞனே, உண்மையில் நீ உனக்காக இங்கில்லை. வேறு யாருக்காகவோ நீ இங்கிருக்கிறாய். அது ஒரு குழந்தை. அந்த குழந்தை இங்கில்லை. அது சமபூமி பிரதேசத்தில் - கான்சாசில் -உள்ளது. (சகோதரன் “ஆம் ஐயா'')அதற்கு ஏதோ ஒரு வித மான... வலிப்பு உள்ளது. அந்த குழந்தையின் மேல் இருள் உள்ள து.. 254. உனக்கு ஏதோ தொடர்புண்டு... அல்லது நீ... அது ஸ்ட்ரிக்கர் குடும்பத்தினருடன். (சகோதரன் “ஆம்'' என்கிறார் - ஆசி) நீங்கள் எல்லோரும் சகோதரிகளை விவாகம் செய்தீர்கள், அதுபோன்ற ஏதோ ஒன்று அல்லவா? (“ஆம்') அது உண்மை . நீ விசு வாசிக்கிறாயா? (“ஆம்') அப்படியானால் அவனுக்கு இனிமேல் வலிப்பே உண்டாகாது - உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப் பாயானால். நீ என்ன விசுவாசிக்கிறாயோ, அதன்படியே அந்த குழந்தைக்கு ஆகக் கடவது (ஒலி நாடாவில் காலி இடம்- ஆசி)  255. அத்தைக்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறாய், அவளுக்கு புற்றுநோய் உள்ளது. பின்னால் உள்ளவளே, உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? உன்னை எனக்குத் தெரியாது. உன்னை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. அந்த மனிதனிடம் நான், அவருடைய உறவினரைக் குறித்து அவர் சிந்தித்துக் கொண்டிருக் கிறார் என்று கூறினபோது, அது நகர்ந்து உன்மேல் வந்தது. இப் பொழுது உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா?  256. அவள் எதைத் தொட்டாள்? அவள் எதைத் தொட்டா ளென்று உங்களில் சிலர் கூற விரும்புகிறேன் (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி).  257. இப்பொழுது இந்த கட்டி தொங்கிக் கொண்டிருக்கிறது.... உனக்கு ஏற்கனவே மூன்று அறுவை சிகிச்சைகள் நடந்தனவா? (யாரோ “இரண்டு” என்கின்றனர் - ஆசி) இரண்டு... இரண்டா ? சரி. 258. சரி, அந்த ஸ்திரீ மரணத்தினால் நிழலிடப்பட்டிருக்கிறாள். அவள் மேல் கறுத்த நிழல் காணப்படுகிறது, அவளுக்கு புற்று நோய் உள்ளது. (அந்த சகோதரி “அது சரி” என்கிறார் - ஆசி) அது சரி. மருத்துவர் உன்னிடம் அது ஊனீர் சுரப்பியில் (Lymph Gland) ஏற்பட்டுள்ள புற்று நோய் என்று கூறினார். அது உண்மை யானால் உன் கையையுயர்த்து. நீ தூரத்திலிருந்து வந்திருக்கிறாய் -ஐயோவாவிலிருந்து. (“ஆம்'') நீ விசுவாசிக்கிறாயா? (“நான் விசுவாசிக்கிறேன், நான் விசுவாசிக்கிறேன், நான் விசுவாசிக் கிறேன்'' உனக்கு ஒரு... மகன்... அது பேரன். (“அது சரி'') அங்கு... அவனுக்கு கண்களில் ஏதோ கோளாறு உள்ளது. (“அது சரி'') அவனுக்காக நீ ஜெபித்துக்கொண்டிருக்கிறாய். (“அது சரி'') நீ யாரென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா? (“ஆம்'') திருமதி.கீ மெக்கி. சுகமடைந்து வீடு திரும்பு. (“ஓ, தேவனே'') (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி).  259. நீங்கள் அந்த படத்தில் காணும் ஒளி பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த ஸ்திரீயின் மேல் தொங்கிக் கொண்டிருக் கிறது. சகோதரியே, நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசு வாசிக்கிறாயா? நீ இராணுவ மருத்துவமனையில் மரணத் தருவாயிலுள்ள உன் கணவனுக்காக ஜெபித்துக் கொண்டி ருக்கிறாய். அது கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. அவர் சுகமடைவார். அவள் எதைத் தொட்டாள்? (ஒலிநாடாவில் காலி இடம்ஆசி).  260. தயவு செய்து நகர்ந்து கொண்டேயிருங்கள். (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி).  261. நீர் வடக்கிலிருந்து வருகிறீர். நீர் இந்தியானாவிலுள்ள பெட்ஃபோர்டைச் சேர்ந்தவர். அது உண்மை. அது உண்மையா? அப்படியானால் உம்முடைய கழுத்து சரியாகிவிடும் என்று விசு வாசிக்கிறாயா? உமது விசுவாசத்தின்படியே உமக்கு ஆகக்கட வது. வீடு திரும்பி தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்.  262. ஓ தேவனே, இந்த வாலிப மனிதன், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி, யெகோவா -யீரேயின் பிரசன்னத்தில் கர்த்தருடைய அருளப்பட்ட பலி, நின்று கொண்டிருக்கிறார். இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பின அந்த வல்லமை தானே இவரை இந்தப் பொழுதில் தொட்டு, இவருடைய இருதயத்தின் வாஞ்சையை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.  263. கர்த்தராகிய இயேசுவே, என் கரத்தை என் சகோதரியின் மீது வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்த கண்கள் சுகமாக்கப்படுவதாக. அவளுடைய - அவளுடைய சரீரத்திலிருக் கும் வேதனை அகல்வதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.  264. எங்கள் பரலோகப் பிதாவே, இது என்னுடைய சிறிய சகோதரி கிட். நான் ஜெபிக்கிறேன், அந்த வல்லமையானது...?..... நகோமிக்குச் செய்தது போல இவர்களுடைய வயதான நேரத் தில் இவர்களுக்கு பெலத்தை தாரும். கர்த்தாவே, இவர்கள் மேலும் உம்முடைய மகிமைக்கென்று இன்னுமாக பயன்படுத்தப் படுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக இதை அருளும் பிதாவே.  265. ஆகவே பிறகு சகோதரன் கிட், கர்த்தாவே, மரணம் அவரை அடித்தது, ஆனால் ஜீவன் அவரை திரும்புவமாகக் கொண்டு வந்தது. தேவனே, அவரை திடமாக வைத்திருக்க நான் ஜெபிக் கிறேன். அவருக்கு அளிக்கப்பட்ட சமயத்தை அவர் மிகவுமாகக் கடந்திருக்கின்றார், ஆனால் நீர் தேவன். மருத்துவமனையில் நீர் எனக்கு வாக்குத்தத்தம் செய்தபடி உம்முடைய மகிமைக்கென்று இதை நீர் செய்தீர். இப்பொழுது சாட்சியாக இவருக்கு பெலத்தை அருளும். இவருடைய சாட்சி தாமே ஒஹையோ மாநிலம், மற்றும் உலக முழுவதிலும் ரீங்காரமிடட்டும். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)  ... இயேசு என்னை இப்பொழுது சுகமாக்குகிறார் அவருடைய வார்த்தையைக் கொண்டு அவரை நம்புகிறேன்.